சிற்பம்
மகரதோரணம்
சிற்பத்தின் பெயர் மகரதோரணம்
சிற்பத்தின்அமைவிடம் குறங்கணி நாதர் கோயில்
ஊர் சீனிவாசநல்லூர்
வட்டம் லால்குடி
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை பிற வகை
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன்
விளக்கம்
கருவறை விமானம் தேவகோட்டத்தின் மேல் அமைந்துள்ள மகரமீன் வடிவம் போன்ற ஓர் அலங்காரத் தோரணம்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
இருபுறமும் அமைந்துள்ள மகரத்தின் வாயிலிருந்து இரண்டு சிம்ம வீரர்கள் வெளி வருகின்றனர். வீரர்கள் அமர்ந்துள்ள வாகனம் யாளியாகவும் இருக்கலாம். மேலே இருபுறமும் அமைந்துள்ள மகரங்களின் வாயிலிருந்து சிம்ம வீரர்கள் வெளிப்படுகின்றனர். கீழே உள்ள யாளியின் வாயிலிருந்து வெளி வரும் வீரர்களும், மேலே உள்ள யாளியின் வாயிலிருந்து வெளி வரும் வீரர்களும் பொருதுவது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது. பல கொடிக் கருக்குகள் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளன. இடது புறம் இரண்டு பூதகணங்கள் காட்டப்பட்டுள்ளன. வலது புறம் வாயைப் பிளந்த படி ஒரு கணமும், அதற்குக் கீழே எருமைத் தலையுடன் கூடிய ஒரு கணமும் காட்டப்பட்டுள்ளன. மகர தோரணத்தின் நடுவில் வராகர் காட்டப்பட்டுள்ளார். நான்கு திருக்கைகளுடன் விளங்கும் வராகர் பின் கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும், முன் வலது கையை வலது தொடையில வைத்தும், இடது கையால் தொடையில் அமர்த்திய பூதேவியை அணைத்தபடியும் உள்ளார்.
குறிப்புதவிகள்
மகரதோரணம்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 17
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்