சிற்பம்
கணபதி
கணபதி
சிற்பத்தின் பெயர் | கணபதி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தஞ்சை பெருவுடையார் கோயில் |
ஊர் | தஞ்சாவூர் |
வட்டம் | தஞ்சாவூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | கணாதிபத்யம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
விளக்கம்
கணங்களின் தலைவனும், சிவ செல்வனும், உமை மைந்தனுமாகிய கணபதி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தாமரைப் பீடத்தின் மீது கணபதி லளிதாசனத்தில் அமர்ந்துள்ளார். அன்னாரின் அமர்வுக்கு மேலே கற்பக்தருவும், குடையும், இருபுறங்களிலும் சாமரமும் காட்டப்பட்டுள்ளன. கணபதியின் பின்புறம் நீள் வட்ட வடிவில் அமைந்த எரிசுடர் அமைப்பு காட்டப்பட்டுள்ளது. இவ்வமைப்பு இக்கோயிலில் மட்டுமே பெரும்பாலும் காணப்படுகிறது. பத்ர பூரிம முகப்புடன் கரண்ட மகுடராய் விளங்கும் கணபதி நெற்றியில் முத்துத் தாமங்களுடன் கூடிய நெற்றிப்பட்டையும் அணிந்துள்ளார். முறச்செவியர் தன் பானை வயிற்றில் உதர பந்தமும், அகல் மார்பில் முப்புரி நூலும், கையணிகள், கழுத்தணிகள் பிறவும் அணிந்து, முன் வலது கையில் ஒடிந்த கொம்பினையும், இடது கையில் மோதகத்தினையும் கொண்டுள்ளார். துதிக்கையில் மோதம் உள்ளது. கணபதியின் பின்னிரு கைகளில் இடது சிதைந்து விட்டது. வலது பின் கையில் உள்ளது யாதென்று அறியக்கூடவில்லை. கணபதியின் இருபுறமும் உள்ள கோட்டப் பகுப்புகளில் பக்கத்திற்கு மூவராக ஆறு கணங்கள் காட்டப்பட்டுள்ளனர். மேலே நிற்கும் கணத்தில் ஒன்று காவலாகவும், ஒன்று இசை முழக்கிக் கொண்டும் நிற்கிறது. மற்ற நான்கு கணங்களும் தங்கள் தலைவருக்குத் தேவையான படையல்களை தலையில் சுமந்துள்ளன. இக்கணங்களின் தோற்றங்களை மிகவும் இரசிக்கத்தக்கவையாக, அவற்றின் செயல்களை மனம் இலயித்து காணக்கூடியவையாக சோழச் சிற்பிகள் வடித்திருப்பது சிற்பக் கலையின் நுணுக்கமாகும்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
கணபதி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |