சிற்பம்
ஹயக்கிரீவர்
ஹயக்கிரீவர்
சிற்பத்தின் பெயர் | ஹயக்கிரீவர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
விளக்கம்
வேதங்களை மீட்டெடுக்க திருமால் எடுத்த அவதாரங்களுள் ஒன்றான குதிரை முகங்கொண்ட ஹயக்கிரீவர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவானவர், இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதிவைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வித் தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை. மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களை பறித்துக் கொண்டனர். அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். வைகுண்டப் பெருமாள் கோயிலில் அமைந்துள்ள ஹயக்கிரீவர் சிற்பம் நின்ற நிலையில் காணப்படுகின்றது. குதிரை முகங்கொண்ட ஹயக்கிரீவர் நான்கு திருக்கைகளுடன் விளங்குகின்றார். பின் கைகளில் பிரயோகச் சக்கரம், சங்கு ஏந்தியும், முன் கைகளில் இடது கையை தொடையில் வைத்தும், வலது கையை கடக முத்திரையில் வைத்தும் உள்ளார். தலையில் கிரீட மகுடமணிந்துள்ளார். ஆடையணிகள் மேற்பூசிய சுதையால் மாற்றம் பெற்றுள்ளன. தன் வலது புறத்தில் உள்ள முனிவர்களை நோக்கியவாறு உள்ளார். ஹயக்கிரீவருக்கு வலது புறத்தில் மூவர் காட்டப்பட்டுள்ளனர். மூவரும் முனிவர் போன்ற தோற்றத்தில் உள்ளனர். மேலே நால்வர் பறந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். ஒருவர் வணங்கிய நிலையிலும், மற்றும் இருவர் கைகளை உயர்த்தி போற்றிய நிலையிலும் காட்டப்பட்டுள்ளனர்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
ஹயக்கிரீவர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |