சிற்பம்
வைகுண்டநாதர்
வைகுண்டநாதர்
| சிற்பத்தின் பெயர் | வைகுண்டநாதர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
| ஊர் | காஞ்சிபுரம் |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | வைணவம் |
| ஆக்கப்பொருள் | மணல் கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
|
விளக்கம்
ஆதிசேஷன் குடையாய் நிற்க வைகுண்டத்தில் பெருமாள் அமர்ந்த கோலம்
|
|
| ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
திருமால் இடது காலை குத்திட்டு, வலது காலை தொங்க விட்டவாறு உத்குடிகாசனத்தில் அமர்ந்துள்ளார். நான்கு கைகளில் பின் கைகள் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளன. வலது முன் கையை ஊன்றிய கையாகவும் (நித்ரா முத்திரை), இடது முன் கை அருகில் நிற்கும் பூமகளை அணைத்தபடியும் வைத்துள்ளார். கிரீட மகுடம் தரித்துள்ள திருமாலின் தலைக்கு மேலே ஆதிசேஷன் குடை பிடித்துள்ளது. நீள் காதுகளில் மகர குண்டலங்கள் விளங்குகின்றன. கழுத்தணிகளாக கண்டிகை, சரப்பளி அழகு செய்கின்றன. தோள்வளை, முன்வளை கையணிகளாக விளங்குகின்றன. வயிற்றில் உதரபந்தம், மார்பில் அணி செய்யப்பட்ட முப்புரிநூல் செல்கிறது. மேலே கந்தர்வர் இருவர் பறந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். திருமாலின் இடது புறம் நிலமகள் இரு கைகளையும் கூப்பி வணங்கிய படி தன் பாரங்களைத் தெரிவிக்கின்றாள். தேவி கரண்டமகுடம் தரித்துள்ளாள். தேவியின் தலைக்கு மேலே கைகளை உயர்த்தி போற்றும் உருவம் காட்டப்பட்டுள்ளது. விஷ்ணுவின் வலது பாதம் அருகே ஒருவர் கருடாசனத்தில் அமர்ந்துள்ளார். எழில் முகத்தினராய் விளங்கும் அவரின் இடது கை சிதைந்துள்ளது. வலது கை கடக முத்திரை காட்டியுள்ளது. இந்த ஆண் உருவம் கருடனாயிருக்கலாம்.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
வைகுண்டநாதர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 24 |
| பிடித்தவை | 0 |