வழிபாட்டுத் தலம்
வைகுண்டப் பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பரமேஸ்வர விண்ணகரம் |
| ஊர் | காஞ்சிபுரம் |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | வைகுண்டப் பெருமாள் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் |
| கல்வெட்டு / செப்பேடு | காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் வைகுண்டப் பெருமாள் திருக்கோலம், கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதிக் கோட்டங்களில் திருமாலின் திருஅவதாரச் சிற்பங்கள் மற்றும் தளங்களிலும் பெருமாள் சிற்பங்கள், திருச்சுற்று மாளிகையில் பல்லவமன்னர்களின் வம்சாவளிப் பட்டியல் புடைப்புச்சிற்பக் காட்சி |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் கால கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. |
|
சுருக்கம்
இரண்டாம் நந்திவர்மனால் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் பெருமாளுக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். இக்கோயிலின் திருச்சுற்று மாளிகையில் பல்லவமன்னர்களின் குலமுதல்வர்களின் வரிசைப் பட்டியல் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மூன்றுதளங்களைக் கொண்டதாகவும், மூன்று கருவறைகளைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்ட இக்கோயில் எண்ணிறந்த திருமால் சிற்பங்களைக் கொண்டுள்ள சிற்பக் கருவூலமாகத் திகழ்கின்றது.
|
|
வைகுண்டப் பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | உயர்ந்த உபபீடத்தின் மீது கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானம் மூன்று தளங்களை உடையது. மூன்று கருவறைகளை கொண்டதாக இக்கோயில் அமைந்திருக்கிறது. தளங்களின் சுற்றுச் சுவர்களிலும் பெருமாளின் அவதாரங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றுமாளிகையில் நான்குபுறமும் புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. மகாமண்டபம் தூண்களும் அமைந்துள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | வரதராஜப்பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில், கச்சபேஸ்வர் கோயில் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லலாம். செங்கல்பட்டு இரயில் நிலையத்திலிருந்தும் காஞ்சிபுரம் செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 89 |
| பிடித்தவை | 0 |