வழிபாட்டுத் தலம்
வரிச்சியூர் உதயகிரீஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | வரிச்சியூர் உதயகிரீஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | உதயகிரீஸ்வரர் கோயில் |
| ஊர் | வரிச்சியூர் |
| வட்டம் | மதுரை வடக்கு |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | உதயகிரீஸ்வரர் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். முகமண்டபத்தில் வலதுபுறம் கைகட்டிய நிலையில் அடியவர் ஒருவர் நின்ற நிலையிலும், இடதுபுறம் வாயிற்காவலர் ஒருவரும் உள்ளனர். முகப்பில் நந்தி அமைந்துள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைக் காட்டுகின்றது. |
|
சுருக்கம்
வரிச்சியூர் மலையின் கிழக்குச் சரிவில் ஒரு குடைவரைக் கோயில் வெட்டப்பட்டுள்ளது. சிறிய கருவறை கொண்டுள்ள இச்சிவன் கோயில் எளிமையான அமைப்புடையது. இது முற்காலப் பாண்டியர் காலக் குடைவரைக்குச் சான்றாக விளங்குகிறது. உட்புறம் சிவலிங்கம் மட்டும் இயற்கையான பாறையில் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய மலையாக இருப்பதால் இக்கோயில் இறைவன் உதயகிரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். முகமண்டபத்தில் வலதுபுறம் கைகட்டிய நிலையில் அடியவர் ஒருவர் நின்ற நிலையிலும், இடதுபுறம் வாயிற்காவலர் ஒருவரும் உள்ளனர். முகப்பில் நந்தி அமைந்துள்ளது.
|
|
வரிச்சியூர் உதயகிரீஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | ஒரு சிறிய கருவறை மற்றும் ஒரு சிறிய முகமண்டபம் மட்டும் கொண்டுள்ளது. எளிமையான அமைப்புடையது. கிழக்கு நோக்கிய மலையாக இருப்பதால் இக்கோயில் உதயகிரீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. உட்புறம் சிவலிங்கம் இயற்கையான பாறையில் அமைக்கப்பட்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | வரிச்சியூர் அஸ்தகிரீஸ்வரர் கோயில், நீலகண்டேஸ்வரர் கோயில், தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு, கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சப்தமாதர்கள் சிற்பங்கள் |
| செல்லும் வழி | வரிச்சியூர் மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் மதுரை (வடக்கு) வட்டத்தில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வரிச்சியூர் செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
7 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 188 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |