Back
வழிபாட்டுத் தலம்
மயூரநாதேசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் மயூரநாதேசுவரர் கோயில்
வேறு பெயர்கள் கௌரி மாயூரம், சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை
ஊர் மயிலாடுதுறை
வட்டம் மயிலாடுதுறை
மாவட்டம் நாகப்பட்டினம்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் மயூரநாதர்
தாயார் / அம்மன் பெயர் அபயாம்பிகை
தலமரம் மா, வன்னி
திருக்குளம் / ஆறு பிரமதீர்த்தம், காவிரி, ரிஷபதீர்த்தம்
வழிபாடு ஆறுகால பூசை
திருவிழாக்கள் கடைமுழுக்கு நாளன்று (ஐப்பசி இறுதி நாள்) இங்குள்ள எல்லாக் கோயில்களிலுமுள்ள மூர்த்திகளும் உலாவாக எழுந்தருளி வந்து மயூரநாரதரோடு தீர்த்தம் கொடுக்கும் சிறப்பு, மிகவும் விசேஷமான திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசிப் பெருவிழாவில் மயிலம்மை வழிபாட்டு ஐதீகமும் வைகாசியில் சஷ்டி விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் நடராச சபையில் உள்ள அம்பலவர் திருமேனி மிகவும் கம்பீரமாகக் காட்சி தருகிறது. அருணாசலேஸ்வரர், நவக்கிரக சந்நிதி, சனிபகவான், சூரியன் ஆகியோரை வழிபட்டு மேலே சென்று துவாரபாலகரைத் தொழுது உட்சென்றால் மூலவர் தரிசனம். கோஷ்டத்தில் நர்த்தனகணபதி, ஜ்வரதேவர், ஆலிங்கன சந்திரசேகரர், தட்சிணாமூர்த்தி, பிரமன், பிட்சாடனர், கங்காவிசர்சனர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. அம்பாள் சந்நிதி தனியாகவுள்ளது. அபயாம்பிகை சதகப் பாடற் கல்வெட்டு உள்ளது. உள் மண்டபத்தில் அனவித்யாம்பிகை சந்நிதியில் சிவலிங்கம் உளது. இத்திருமேனிக்குப் புடவை சார்த்தப்பட்டுள்ளது. ஆடிப்பூர அம்மன் தரிசனம். அபயாம்பிகைக் கீர்த்தனைகளும் கல்லிற் பதிக்கப்பட்டுள்ளன. அம்பாள் நின்ற திருமேனி - அழகான திருக்கோலம். இத்தலத்துக் காவிரித் துறையில் (ஐப்பசி) துலா நீராடுதல் மிகவும் விசேஷமானது. அங்கு காசி விசுவநாதர், விசாலாட்சி கோயிலுள்ளது. உத்தரமாயூரம் எனப்படும் வள்ளலார் கோயில் காவிரிக்கு வடகரையில் உள்ளது. இங்கு மேதாதட்சிணாமூர்த்தி, ரிஷபதேவருக்கு உபதேசிக்கும் மூர்த்தியாக (யோகாசனத்தில் அமர்ந்து ஞான முத்திரையுடன் எழுந்தருளியுள்ளார்.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
சுருக்கம்
அம்பாள் மயில்வடிவில் வழிபட்ட தலம். அம்மை மயில் வடிவங்கொண்டு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும். இத்தலம் கௌரி மாயூரம் என்றும் பெயர் பெறும். சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம். இந்திரன், பிரமன், வியாழபகவான், அகத்தியர், சப்த மாதாக்கள், உமாதேவி ஆகியோர் வழிபட்ட தலம். நாடொறும் ஆறுகால வழிபாடுகள். கந்தபுராணத்தில் வழிநடைப் படலத்தில் இத்தலம் பற்றிய குறிப்பு வந்துள்ளது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தலபுராணமும், அபயாம்பிகை மாலையும், அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார். நல்லத்துக்குடி கிருஷ்ணய்யர் என்பவரும் அபயாம்பிகை சதகம் பாடியுள்ளார். கல்வெட்டில் இத்தலத்திறைவன் ‘மயிலாடுதுறை உடையார்’ என்று குறிக்கப் பெறுகின்றார். காசிக்குச் சமமான ஆறுதலங்களுள் இதுவுமொன்று.
மயூரநாதேசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு மிகப்பெரிய கோயில். இராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடனும், அழகான சிற்பங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. உட்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. இராஜகோபுரத்துள் நுழைந்ததும் இடப்பால் திருக்குளம். வலப்பால் குமரக்கட்டளை அலுவலகம். பிராகாரத்தில் இடப்பால் குமரக்கட்டளைக்குரிய (தருமையாதீனத்திற்குரியதான) ஆஸ்தான மண்டபம் உள்ளது. மண்டபத்தில் இருபுறமும் விநாயகர் சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. மண்டபத்தில் இரு கொடிமரங்கள் உள. நேரே பார்த்தால் சுவாமி சந்நிதி தெரிகிறது. வாயிலை தாண்டிச் சென்றால் உட்சுற்றில் இடப்பால் சந்திரன், மயிலம்மை சந்நிதிகளும்; வலப்பால் உற்சவ மூர்த்தங்களின் பாதுகாப்பறையும், இடப்பால் நால்வர், சப்த மாதாக்களைத் தொடர்ந்து அறுபத்துமூவர் உற்சவத் திருமேனிகளும், இந்திரன், அக்கினி, எமன், நிருதி ஆகியோர் வழிபட்ட இலிங்கங்களும், மகாவிஷ்ணுவும், வருணன், வாயு வழிபட்ட லிங்கங்களும், மகாலட்சுமியும், அஷ்டலட்சுமியும் நமக்குக் காட்சி தருகின்றனர். திருமுறைக்கோயில் தனிச் சந்நிதியாகவுள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள்
செல்லும் வழி சென்னை திருச்சி - இராமேஸ்வரம் மெயின்லைன் இருப்புப் பாதையில் உள்ள சந்திப்பு நிலையம். சென்னை, கடலூர், தஞ்சை, விழுப்புரம் முதலான பல ஊர்களிலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் ஏராளமாக வுள்ளன.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை
மயூரநாதேசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் மயிலாடுதுறை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி மயிலாடுதுறை, கும்பகோணம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Nov 2018
பார்வைகள் 43
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்