Back
வழிபாட்டுத் தலம்
உதகை புனித செயிண்ட் தாமஸ் ஆலயம்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் உதகை புனித செயிண்ட் தாமஸ் ஆலயம்
வேறு பெயர்கள் புனித செயிண்ட் தாமஸ் ஆலயம்
ஊர் உதகை (ஊட்டி)
வட்டம் கோத்தகிரி
மாவட்டம் நீலகிரி
உட்பிரிவு 8
தலமரம் கிறிஸ்துமஸ் மரம்
திருவிழாக்கள் கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு
காலம் / ஆட்சியாளர் 1870
கல்வெட்டு / செப்பேடு உதகமண்டலத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன் தேவாலயத்தில் உள்ள சபை பெரிதாக வளர்ந்தது. அதிக அளவில் ஜனங்கள் வரத்தொடங்கினர். இடப்பற்றாக்குறையை போக்கும் விதமாக 1853 ஆம் ஆண்டில் மறைமாவட்ட பிஷப்புக்கு உதகமண்டலத்தில் கூடுதல் தேவாலயம் கட்டப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்று ஏரியின் தெற்கே உள்ள மேட்டுப்பகுதியில் 1860 ஆம் ஆண்டு புதிய தேவாலய திட்டத்தை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டது. அதன்படி பிஷப் தேவாலயம் கட்ட ரூ. 38,642 / - என்ற மதிப்பீடு செய்தார். பல்வேறு நிதிச் சிக்கல் மற்றும் நிர்வாக முடிவுகளுக்காக காத்திருந்து பின்னர் மே 1, 1867 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்வாலயம் புனிதர் செயிண்ட் தாமஸ் நினைவாக 1869 ம் ஆண்டு ஜெனரல் ஹோவர்ட் டாக்கர் என்பவரால் தொடங்கப்பட்டு 1870 ஆம் ஆண்டு ஏரியை காணும் விதமாக ரூ 634,050 செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கல்கத்தா லார்ட் பிஷப் ரெவ். ராபர்ட் மில்மன்,அவர்கள் ஏப்ரல் 13,1871 அன்று பொது மக்கள் வழிபாட்டிற்கான தேவாலயத்தை திறந்து வைத்தார்.
சிற்பங்கள் இத்தேவாலயத்தில் பின்புறத்தில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்தில்எட்வர்ர்டு வில்லியம் ஸ்மித் என்பவரின் மனைவி லாரா சார்லாட்டி என்பவரின் சிற்பம் அமைந்துள்ளது. சிறந்த கலைப்பாணியில் இச்சிற்பம் எழிலாக ஒரு தேவதை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தலத்தின் சிறப்பு 150 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.
சுருக்கம்
உதகமண்டலத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன் தேவாலயத்தில் உள்ள சபை பெரிதாக வளர்ந்தது. அதிக அளவில் ஜனங்கள் வரத்தொடங்கினர். இடப்பற்றாக்குறையை போக்கும் விதமாக 1853 ஆம் ஆண்டில் மறைமாவட்ட பிஷப்புக்கு உதகமண்டலத்தில் கூடுதல் தேவாலயம் கட்டப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்று ஏரியின் தெற்கே உள்ள மேட்டுப்பகுதியில் இவ்வாலயம் புனிதர் செயிண்ட் தாமஸ் நினைவாக 1869 ம் ஆண்டு ஜெனரல் ஹோவர்ட் டாக்கர் என்பவரால் தொடங்கப்பட்டு 1870 ஆம் ஆண்டு ஏரியை காணும் விதமாக ரூ 634,050 செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கல்கத்தா லார்ட் பிஷப் ரெவ். ராபர்ட் மில்மன்,அவர்கள் ஏப்ரல் 13,1371 அன்று பொது மக்கள் வழிபாட்டிற்கான தேவாலயத்தை திறந்து வைத்தார். அங்கு நடைபெற்ற முதல் ஞானஸ்நானம் லெப்டினன்ட் எஃப். டபிள்யூ. போட்லர் மகன் வில்போர்ட் ஹென்றிக்கு 8 ஜூன் 1878 இல் நடந்தது. செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் முதல் திருமணம் ஜி. ஆர். பெர்ட்ராமுடன் எச். சி. போன்ஜோர்க்கு ஆகஸ்ட் 1, 1880 அன்று நடை பெற்றது. இத்தேவாலயத்தில் முதல் இந்திய திருமணம் நவம்பர் 30, 1881 அன்று நடைபெற்றது. ஆங்கில அரசாங்கம் தேவாலயத்தை முழுவதுமாக 1940 இல் மிஷனிடம் ஒப்படைத்தது.
உதகை புனித செயிண்ட் தாமஸ் ஆலயம்
கோயிலின் அமைப்பு செயிண்ட் தாமஸ் தேவாலயம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. ஐரோப்பியர்களின் கட்டிடக்கலைப்பாணியில் இத்தேவலாயம் விளங்குகிறது.
பாதுகாக்கும் நிறுவனம் தென் இந்திய திருச்சபை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் அண்ணாமலை கோயில், துரூக் கோட்டை, சிஎஸ்ஐ தூய கிறித்துவ தேவாலயம்
செல்லும் வழி உதகையின் மையப்பகுதியில் ஏரியின் தெற்கே இத்தேவாலயம் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 8.00 மணி, 11.00 மணி
உதகை புனித செயிண்ட் தாமஸ் ஆலயம்
அருகிலுள்ள பேருந்து நிலையம் உதகமண்டலம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் உதகமண்டலம்
அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர்
தங்கும் வசதி உதகமண்டல விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 79
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்