வழிபாட்டுத் தலம்
நார்த்தாமலை விசயாலயச் சோழீச்சுவரம்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | நார்த்தாமலை விசயாலயச் சோழீச்சுவரம் |
|---|---|
| வேறு பெயர்கள் | விசயாலயச் சோழீச்சுவரம் |
| ஊர் | நார்த்தாமலை |
| வட்டம் | புதுக்கோட்டை |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | சிவபெருமான் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு / விஜயாலயச் சோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | கல்வெட்டுகள் உள்ளன. |
| சுவரோவியங்கள் | சிதைந்த நிலையில் உள்ளன. |
| சிற்பங்கள் | சிவன் குடைவரையில் கருவறையில் இலிங்கம், நந்தி, வாயிற்காவலர்கள், சப்தமாதர்கள், சண்டேசுவரர் ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. |
|
சுருக்கம்
விசயாலயச் சோழீஸ்வரம் முழுவதும் கற்றளியாகும். அர்த்தமண்டபம், முகமண்டபத்துடன், கோயிலைச் சுற்றிலும் எட்டுப் பரிவார சந்நிதிகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. கோட்டங்களில் சிற்பங்கள் இல்லை. நான்கு தளங்களைக் கொண்டுள்ளது. தளங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலின் உட்புறம் அமைந்துள்ள கருவறை வட்டவடிவமாகவும், அதனைச் சுற்றியுள்ள சுவர் சதுரமாகவும், அர்ததமண்டபத்துடன் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் மேற்புறமுள்ள சிகரம் வட்டவடிவமாய் வேசரபாணியில் அமைந்துள்ளது. கருவறையின் முன்புறமுள்ள அர்த்தமண்டபத்தில் பிற்கால ஓவியங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. அர்த்த மண்டபத்தின் வெளிப்புறம் வாயிலின் இருபுறமும் மிக அழகான எடுப்பான தோற்றத்துடன் காட்சியளிக்கும் துவாரபாலகர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. துவாரபாலகர் சிற்பம் ஒன்றின் அடியில் காணப்படும் ஒன்பதாம் நூற்றாண்டு தமிழ்க் கல்வெட்டு இக்கோயில் மழையால் (இடியால்) தாக்கப்பட்டுச் சிதைவுற்றதையும் பின்னர் இக்கோயில் எடுத்துக் கட்டப்பட்டதையும் குறிப்பிடுகிறது. இக்கோயிலைச் செம்பூதியான இளங்கோவதிரையன் என்பவன் எடுப்பித்தான். சிறிது காலத்தில் அது மழையால் அழிந்து போனது. உடனே மல்லன் விடுமனான தென்னவர் தமிழரையன் என்பவன் அதனைப் புதுப்பித்தான் என்று கல்வெட்டுக் கூறுகிறது. இக்கோயிலில் இருந்த அழகிய வீணாதரர், சப்தமாதர் சிற்பங்கள் தற்போது புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளன. இக்கற்றளியின் எதிர்புறம் சிவன் குடைவரை ஒன்று அமைந்துள்ளது. அதன் அருகே மற்றொரு பெரிய குடைவரைக்கோயில் விஷ்ணுவிற்குரியதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் காணமுடியாத முறையில் சங்கு சக்கரம் ஏந்திய நின்ற நிலையிலுள்ள பன்னிரண்டு திருமால் சிற்பங்கள் இக்கோயில் முகமண்டபத்தில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. ஆனால் கருவறையில் சிவலிங்கத்தின் ஆவுடையார் காணப்படுகின்றது.
|
|
நார்த்தாமலை விசயாலயச் சோழீச்சுவரம்
| கோயிலின் அமைப்பு | விசயாலயச் சோழீஸ்வரம் முழுவதும் கற்றளியாகும். அர்த்தமண்டபம், முகமண்டபத்துடன், கோயிலைச் சுற்றிலும் எட்டுப் பரிவார சந்நிதிகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. கோட்டங்களில் சிற்பங்கள் இல்லை. நான்கு தளங்களைக் கொண்டுள்ளது. தளங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலின் உட்புறம் அமைந்துள்ள கருவறை வட்டவடிவமாகவும், அதனைச் சுற்றியுள்ள சுவர் சதுரமாகவும், அர்ததமண்டபத்துடன் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் மேற்புறமுள்ள சிகரம் வட்டவடிவமாய் வேசரபாணியில் அமைந்துள்ளது. கருவறையின் முன்புறமுள்ள அர்த்தமண்டபத்தில் பிற்கால ஓவியங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. அர்த்த மண்டபத்தின் வெளிப்புறம் வாயிலின் இருபுறமும் மிக அழகான எடுப்பான தோற்றத்துடன் காட்சியளிக்கும் துவாரபாலகர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. துவாரபாலகர் சிற்பம் ஒன்றின் அடியில் காணப்படும் ஒன்பதாம் நூற்றாண்டு தமிழ்க் கல்வெட்டு இக்கோயில் மழையால் (இடியால்) தாக்கப்பட்டுச் சிதைவுற்றதையும் பின்னர் இக்கோயில் எடுத்துக் கட்டப்பட்டதையும் குறிப்பிடுகிறது. இக்கோயிலைச் செம்பூதியான இளங்கோவதிரையன் என்பவன் எடுப்பித்தான். சிறிது காலத்தில் அது மழையால் அழிந்து போனது. உடனே மல்லன் விடுமனான தென்னவர் தமிழரையன் என்பவன் அதனைப் புதுப்பித்தான் என்று கல்வெட்டுக் கூறுகிறது. இக்கோயிலில் இருந்த அழகிய வீணாதரர், சப்தமாதர் சிற்பங்கள் தற்போது புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளன. இக்கற்றளியின் எதிர்புறம் சிவன் குடைவரை ஒன்று அமைந்துள்ளது. அதன் அருகே மற்றொரு பெரிய குடைவரைக்கோயில் விஷ்ணுவிற்குரியதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் காணமுடியாத முறையில் சங்கு சக்கரம் ஏந்திய நின்ற நிலையிலுள்ள பன்னிரண்டு திருமால் சிற்பங்கள் இக்கோயில் முகமண்டபத்தில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. ஆனால் கருவறையில் சிவலிங்கத்தின் ஆவுடையார் காணப்படுகின்றது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | அணிமத ஏரி, சிவன் குடைவரை, திருமேற்றளி என்னும் பதினெண்பூமி விண்ணகரம் எனப்படும் விஷ்ணுக் குடைவரை |
| செல்லும் வழி | மதுரையிலிருந்து 140 கி.மீ. தொலைவிலுள்ள புதுக்கோட்டையிலிருந்து நார்த்தா மலை செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 65 |
| பிடித்தவை | 0 |