வழிபாட்டுத் தலம்
திருக்கடிகை யோகநரசிம்மப் பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருக்கடிகை யோகநரசிம்மப் பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சோளசிம்மபுரம், சோளிங்கர், கடிகாசலம் |
| ஊர் | சோளிங்கர் |
| வட்டம் | அரக்கோணம் |
| மாவட்டம் | வேலூர் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | யோக நரசிம்மர் |
| தாயார் / அம்மன் பெயர் | அம்ருதவல்லி |
| திருக்குளம் / ஆறு | அம்ருத தீர்த்தம், தக்கான் குளம், பாண்டவ தீர்த்தம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நரசிம்ம ஜெயந்தி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பல்லவர், சோழர், விசயநகரர் |
| கல்வெட்டு / செப்பேடு | சோழநாட்டைப் போன்று வளமிகுந்து நரசிம்மப் பெருமாள் உறைதற்கு இடமாதல் பற்றி சோளசிம்மபுரம் என்று அழைக்கப்படுகிறது. கல்வெட்டுக்களும் இப்பெயரையே குறிக்கின்றன. இப்போது சோளிங்கர் என்பர். சோழன் கரிகால் பெருவளத்தான் தன் நாட்டை 48 மண்டலங்களாகப் பிரித்த போது இப்பகுதியைக் கடிகைக் கோட்டம் என்னும் பெயராலேயே குறிக்கிறான். இச்செய்தி பட்டினப் பாலையில் பேசப்படுகிறது. இராமானுஜர் தமது விசிஸ்டாத்வைத வைணவக் கோட்பாடுகளை தழைக்க நியமித்த 74 சிம்மாசனங்களில் இதுவும் ஒன்று. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இங்கு கீழே உற்சவரும், சுமார் 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும் அதனருகில் உள்ள சிறிய மலையில் சங்கு சக்கரங்களுடன் இலங்கும் ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர். |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். பேயாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. |
|
சுருக்கம்
‘வண்பூங்கடிகை இளங்குமரன்’ என்பது பேயாழ்வார் மங்களாசாசனம். கடிகாசலம் என்னும் இங்கு ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து அக்காரக் கனியான எம்பெருமானை சேவித்தாலே மோட்சம் சித்திக்கும் என நூல்கள் மொழிகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்களும் இருக்கலாம். அவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து நரசிம்மரைச் சிந்தித்தாலே போதுமென்கிறார் பிள்ளைப் பெருமாளையங்கார். மலைமேல் இருக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு பக்தோசித ஸ்வாமி என்ற பெயருண்டு. பக்தர்கள் உசிதப்படி அருள்பவர் என்பது பொருள். அடிவாரத்தில் உள்ள பக்தோசித சுவாமிக்கு தக்கான் எனப் பெயர். தீர்த்தத்திற்கும் தக்கான் குளம் என்பதே பெயர். திருமங்கையாழ்வார் இச்சொல்லை எடுத்தாண்டுள்ளார். இங்குள்ள பெரியமலையில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இது 1500 படிகள் கொண்டது. இவரைத் தரிசித்துவிட்டுத்தான் சிறிய மலையில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும். ஸ்ரீமந் நாதமுனிகளும், திருக்கச்சி நம்பிகளும், மணவாளமாமுனியும், இராமானுஜரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். கி.பி. 1781ல் ஆங்கிலேயருக்கும், ஹைதரலிக்கும் நடைபெற்ற இரண்டாம் கர்நாடகப்போர் இத்தலத்தின் முன்பகுதியில் நடைபெற்றபோதும் அவர்களால் இக்கோவிலுக்கு ஊறு நிகழவில்லை. அஹோபில மலைதான் எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த இடம். மீண்டும் ஒருமுறை முனிவர்க்காக அந்த அவதாரத்தை இங்கே மேற்கொண்டதால். தமிழகத்தில் எம்பெருமான் அமர்ந்துள்ள மலைகளிலேயே இது மிகச் சிறப்பானதாகும். ஏகசிலா பர்வதமென்றும் இதற்கு பெயர். பிரிவுகளும் சேர்க்கைகளுமின்றி ஒரே கல்லில் அமைந்த சிலைபோல் ஒரே கல்லில் இம்மலை அமைந்திருப்பதால் ஏகசிலா பர்வதம்.
|
|
திருக்கடிகை யோகநரசிம்மப் பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் கருவறை விமானம் ஸிம்ஹ விமானம் கோஷ்டாக்ருதி விமானம் (ஸிம்ஹாக்ர விமானம்) ஹேமகோடி விமானம் என்றும் சொல்லப்படும். யோக நிலையில் அமர்ந்த (சங்கு சக்கரத்துடன்) ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | ஆஞ்சநேயர் கோயில், லெட்சுமி நரசிம்மர் கோயில், ஆதிகேசவப் பெருமாள் கோயில் |
| செல்லும் வழி | இத்திருத்தலம் அரக்கோணம் புகைவண்டி நிலையத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 6.00 வரை |
திருக்கடிகை யோகநரசிம்மப் பெருமாள் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | சோளிங்கர் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | அரக்கோணம் |
| அருகிலுள்ள விமான நிலையம் | சென்னை - மீனம்பாக்கம் |
| தங்கும் வசதி | அரக்கோணம் விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Nov 2018 |
| பார்வைகள் | 34 |
| பிடித்தவை | 0 |