வழிபாட்டுத் தலம்

திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் கோயில் |
---|---|
வேறு பெயர்கள் | திருவிண்ணகர் |
ஊர் | திருநாகேஸ்வரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
தொலைபேசி | 0435-2463385, 2463685 |
உட்பிரிவு | 2 |
மூலவர் பெயர் | ஒப்பிலியப்பன் |
தாயார் / அம்மன் பெயர் | பூமிதேவி |
தலமரம் | வில்வம் |
திருக்குளம் / ஆறு | அஹோராத்ர புஷ்கரணி, ஆர்த்தி புஷ்கரிணி, சார்ங்க தீர்த்தம், சூர்ய தீர்த்தம், இந்திர தீர்த்தம் |
ஆகமம் | ஸ்ரீவைகானஸம் |
வழிபாடு | ஆறுகால பூசை |
திருவிழாக்கள் | ஆடி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ர உற்சவம், புரட்டாசி பிரம்மோற்சவம், ஸ்ரீராமநவமி, திருக்கல்யாண உற்சவம் |
காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பல்லவ, பாண்டிய சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர் |
சுவரோவியங்கள் | இல்லை |
தலத்தின் சிறப்பு | 108- திவ்ய தேசங்களில் ஒன்று. பேயாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம். |
சுருக்கம்
திருப்பதி போக இயலாதவர்கள் வேங்கடேசனுக்குச் செய்து கொண்ட பிரார்த்தனைகளை இங்கேயும் செலுத்தலாம். திருப்பதி ஸ்ரீனிவாசனுக்கு தமையனார் என்கிற ஐதீகம். 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுந்தான் உப்பில்லா நிவேதனம். சிரவண நட்சத்திரத்தன்று (திருவோண நட்சத்திரம்) சிரவண தீபம் எடுத்துக் குறி சொல்லுவது இங்குவிசேஷம்) திருப்பதி வெங்கிடாசலபதிக்கு உண்டானது போல் இப்பெருமானுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு. நம்மாழ்வார் இருந்த இடத்திலேயே இருக்க பல ஸ்தலங்களில் இருக்கும் பெருமாள்கள் அவருக்கு காட்சி கொடுக்க அவர் ஆனந்தித்து பாடியதாக ஐதீஹம். இத்தலத்துப் பெருமான் தானே மிகவும் உகந்து ஆழ்வாரை அணைந்து ஐந்து திருக்கோலங்களில் காட்சி கொடுத்தார். அவையாவன. பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன், இவ்வைந்து பெயரிட்டு, “என்னப்ப னெக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாயப் பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பணென்ப்பனுமாய் மின்னப் பொன் மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன் தன்னொப் பாரில்லப்பன் தந்தனன் தனதாழ் நிழலே“ - என்பது திருவாய்மொழி 6-3-9 நம்மாழ்வாரின் பாசுரம். இத்தலத்தையும், பெருமானையும் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரம், திருமங்கையாழ்வார் 34 பாக்கள், பொய்கை யாழ்வார்-1, பேயாழ்வார்-2. மங்களாசாசனம். பிள்ளைப் பெருமாளய்யங்காரும் மங்களாசாசனம் செய்துள்ளார். வடமொழியில் இத்தலம் வைகுண்டத்திற்குச் சமமானதாகப் பேசப்படுகிறது. எனவே இதனை ஆகாச நகரி என்றே வடநூல்கள் கூறுகின்றன. வைகுண்டத்தில் ஓடக்கூடிய விரஜா நதியே நாட்டாரு (தட்சிண கங்கை) என்ற பெயரில் இங்கு ஓடுவதாக ஐதீஹம்.
|
திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் கோயில்
கோயிலின் அமைப்பு | |
---|---|
பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில், குடந்தை சாரங்கபாணி கோயில், இராமசுவாமி கோயில் |
செல்லும் வழி | கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. |
கோவில் திறக்கும் நேரம் | காலை 5.00 -12.30 முதல் மாலை 4.30-9.30 வரை |
வழிபாட்டுத் தலம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 Sep 2017 |
பார்வைகள் | 56 |
பிடித்தவை | 0 |