சிற்பம்
நான்முகன்
நான்முகன்
சிற்பத்தின் பெயர் | நான்முகன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
விளக்கம்
பல்லவர்களின் குல முதல்வர்களாக பல்லவர் செப்பேடுகளில் குறிப்பிடப்படும் திருமால், திருமால் உந்தியில் உதித்த நான்முகன் ஆகியோர் சிற்பங்கள் வரிசையாகக் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் நான்முகன் சிற்பம் இது.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இச்சிற்பத் தொகுதி திருச்சுற்று மாளிகையில் அமைந்துள்ளது. நான்முகன் பீடத்தில் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். அவருக்கு மூன்று தலைகள் தெரிகின்றன. நீண்ட சடைமகுடம் தரித்துள்ளார். நான்கு திருக்கைகளில் வலது முன் கை அபய முத்திரையாகவும், இடது முன் கை யோக முத்திரையாகவும் அமைந்துள்ளன. பின்னிரு கைகளில் உள்ளன யாதென்று அறியக்கூடவில்லை. கணுக்கால் வரை நீண்ட ஆடை உடுத்தியுள்ளார். கழுத்தில் கண்டிகை, ஆரம், சவடி ஆகியன அணி செய்கின்றன. வயிற்றில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. முப்புரிநூல் அணிந்துள்ளார். நான்முகனின் தலைப்பகுதியில் நால்வர் பக்கத்திற்கு இருவராக காட்டப்பட்டுள்ளனர். இருவர் சாமரம் வீசுபவர்கள். மற்ற இருவரோ வலது கையை உயர்த்தியுள்ளனர். பிரம்மனின் பீடத்தின் இருபுறமும் இருவர் ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ளனர். வலதுபுறம் உள்ளவர் இருகைகளை கூப்பி வணங்குகின்றார். இடது புறம் உள்ளவர் வலது கையில் மலரைப் பிடித்துள்ளார். இடது கையை ஏந்து கையாக வைத்துள்ளார். இருவரும் கிரீட மகுடம் அணிந்துள்ளனர். வலதுபுறம் உள்ளவரின் மார்பணிகள் நன்கு தெரிகின்றன. கண்டிகை, முத்துச்சரம் ஆகியன அணி செய்கின்றன. கைகளை கூப்பியுள்ளவரோ கழுத்தில் கண்டிகை, ஆரம் அணிந்துள்ளார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
நான்முகன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |