சிற்பம்
நான்முகன்
நான்முகன்
சிற்பத்தின் பெயர் | நான்முகன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
விளக்கம்
நான்முகனாகிய பிரம்மதேவர் தாமரைப் பீடத்தில் அமர்ந்து வேள்விக்கு தலைமை வகிக்கும் காட்சி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இச்சிற்பத் தொகுதி மிகவும் சிதைந்துள்ளது. நான்முகன் தாமரைப்பீடத்தில் சுகாசனத்தில் வலது காலை மடக்கி. இடது காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். அவரின் காலருகே இருவர் நின்ற நிலையில் உள்ளனர். நான்முகனுக்கு இடது புறம் நிற்பவர் கைகளைக் கூப்பி வணங்கியபடி உள்ளார். வலதுபுறம் நிற்பவர் இடது கையில் மலரைப் பிடித்துள்ளார். வலது கை மார்பிற்கு குறுக்காக வைத்துள்ளார். நான்முகனின் தலையருகே நால்வரின் முகங்கள் மட்டும் காட்டப்பட்டுள்ளன. பிரம்மதேவரின் ஆசனத்திற்குக் கீழே இருவர் அமர்ந்துள்ளனர். அதில் ஒருவருடைய உருவம் பெரியதாகவும், மற்றொருவர் சிறிய உருவமாகவும் காட்டப்பட்டுள்ளன. ஆடையணிகள் அறியக்கூடவில்லை. வேள்வி செய்யும் காட்சி போல் தெரிகிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
நான்முகன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |