சிற்பம்

நான்முகன்

நான்முகன்
சிற்பத்தின் பெயர் நான்முகன்
சிற்பத்தின்அமைவிடம் கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம்
ஊர் கங்கை கொண்ட சோழபுரம்
வட்டம் ஜெயங்கொண்டம்
மாவட்டம் அரியலூர்
அமைவிடத்தின் பெயர் கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

நான்முகன் நான்கு தலைகளுடனும், நான்கு திருக்கைகளுடனும் நின்ற நிலையில் உள்ளார். மேலிரு கைகளில் அக்கமாலையும், கெண்டியும் கொண்டுள்ளார். முன்னிரு கைகளில் வலது கை காக்கும் கரமாகவும், இடது கையை ஊரு முத்திரையாகவும் அமைந்துள்ளன. முப்புரிநூல் மார்பின் குறுக்கே செல்கிறது. முப்புரிநூலின் முடிச்சு மார்பின் மையத்தில் விளங்குகிறது. நீள் செவிகளில் குண்டலங்களும், கழுத்தில் கண்டி, சரப்பளி முதலிய அணிகளும், கைகளில் வளைகளும் மிளிர்கின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் க.த. காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள நான்முகனின் சிற்பம் சோழர் காலத்திய கலைப்பாணியைக் கொண்டது. இச்சிற்பம் தனிச் சிற்பமாக கோட்டத்தில் இருந்திருக்க வேண்டும். தொடை வரை மட்டுமே தற்பொழுது இச்சிற்பம் காணப்படுகின்றது.

நான்முகன்
சிற்பம்

நான்முகன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 29 Aug 2022
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்