சிற்பம்
கூர்மவதாரம்
கூர்மவதாரம்
சிற்பத்தின் பெயர் | கூர்மவதாரம் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
விளக்கம்
பாற்கடல் கடையும் பொழுது ஆமை வடிவெடுத்த விஷ்ணு மந்தர மலையைத் தாங்குதல்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடையும் பொழுது திருமால் ஆமையாய் வடிவெடுத்து மந்தர மலையைத் தாங்குகிறார். திருமாலின் முழங்கால் வரையிலான உருவம் காட்டப்பட்டுள்ளது. அதற்குக் கீழே மலையைத் தாங்கும் ஆமை வடிவம் காட்டப்பட்டுள்ளது. விஷ்ணு நான்கு திருக்கைகளில் பின்னிரு கைகளை இடையில் வைத்தவாறு சமபாதத்தில் நிற்கிறார். முன் கைகளில் அமிர்த கலசத்தை தாங்கியுள்ளார். கலசம் சிதைந்துள்ளது. கிரீட மகுடம் அணிந்து, நீள் காதுகளில் மகரகுண்டலங்கள் அணிந்துள்ளார். விஷ்ணுவின் அருகில் அறுவர் பறந்த நிலையில் கைகளை உயர்த்தி வாழ்த்தொலிக்கின்றனர். தாமரை மொட்டிலிருந்து ஆமை வெளிவருகின்றது. இக்காட்சியின் கீழே சன, சனத்குமார, சனக முனிவர்கள் நால்வரும் பக்கத்திற்கு இருவராக கால்களை குறுக்காக மடித்து அமர்ந்து (ஸ்வஸ்திகாசனம்) உள்ளனர். ஒருவரின் முற்றிலும் சிதைந்துள்ளது. நீள் காதுகள் கொண்டுள்ளனர். முனிவர்களுக்கேயுரிய ஜடாபாரம் தலையில் அணி செய்கிறது. கழுத்தில் கண்டிகை, சரப்பளியும், கால்களில் தண்டையும் அணிந்துள்ளனர். முகம் சிதைந்த முனிவர் இடது கையை உயர்த்தி போற்றுகிறார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
கூர்மவதாரம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |