சிற்பம்

நான்முகன்
சிற்பத்தின் பெயர் | நான்முகன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
படைக்கும் கடவுள் பிரம்மன்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
உலகினையும், அதன் உயிர்களையும் படைத்திடும் நான்முகக் கடவுளுக்கு தமிழகத்தில் அமைந்த முதல் சிற்ப வடிவம் இதுவாகும். பிரம்மனின் நான்கு முகங்களில் மூன்று முகங்கள் தெரிகின்றன. ஜடாபந்தத்தினை தலைக் கோலமாகக் கொண்டுள்ள நான்முகன் சம பாதங்களில் நேராக நிற்கிறார். நீள் செவிகளில் மகர குண்டலங்கள் அணி செய்கின்றன. கழுத்தில் சவடி விளங்க, கைகளில் தோள் வளை, மூன்று அடுக்கிலான முன் வளைகள் அணிந்துள்ளார். மார்பில் உத்தரீயம் எனப்படும் மேலாடை குறுக்காக முப்புரிநூலாக அமைகின்றது. வயிற்றில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. இடையில் அரைப்பட்டிகை முகப்புடன் விளங்க, கணுக்கால் வரையிலான நீண்ட நூலாடை கால்களுக்கு இடையே குறுக்காக மடித்துக் கட்டப்பட்டுள்ளது. இடைக்கட்டு எனப்படும் கடிபந்தம் தொடை மேல் வளைத்து காட்டப்பட்டுள்ளது. இடைக்கட்டின் முடிச்சு இருபுறமும் நீண்டு தொங்குகின்றன. நான்முகனின் நான்கு திருக்கைகளில் பின்னிரு கைகளில் அக்கமாலையும், கெண்டியும் கொண்டுள்ளார். முன் வலது கை அபய முத்திரையும், இடது முன் கை இடையில் வைத்தவாறு கடி முத்திரையாகவும் அமைந்துள்ளன. அந்தணர்களின் தலைவர் அகன்ற மார்பினராய் காட்டப்பட்டுள்ளார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |