சிற்பம்
கருடானுக்கிரக மூர்த்தி
கருடானுக்கிரக மூர்த்தி
சிற்பத்தின் பெயர் | கருடானுக்கிரக மூர்த்தி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
விளக்கம்
விஷ்ணு கருடனுக்கு முடிசூட்டி அருள்பாலிக்கும் காட்சி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
விஷ்ணு வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடக்கி, மடக்கிய காலின் மேல் அமர்ந்துள்ளார். விஷ்ணுவின் தோற்றம் பக்கவாட்டில் அமைந்துள்ளது. கிரீட மகுடம் அணிந்துள்ள திருமால் பின் கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளார். முன்னிரு கைகளால் தன் கொடி, ஆசனம், சகா, அடிமை என அமைந்த கருடனின் தலையில் முடிசூட்டுகிறார். பெருமாளின் இடையாடை முடிச்சுகள் வலது தொடையில் படர்ந்துள்ளன. கைகளில் தோள்வளை, முன்வளைகள் அணிந்துள்ளாரர். கால்களில் தண்டை அணிந்துள்ளார். கழுத்தணிகள் சிதைந்துள்ளன. வயிற்றில் உதரபந்தம் அமைந்துள்ளது. கருடன் பணிவுடன் இரண்டு கைகளை கூப்பி வணங்கி நிற்கிறான். அரையாடை அணிந்து, சமபாதத்தில் நிற்கும் கருடன் கையணி, கழுத்தணி, காலணி ஆகியன அணிந்துள்ளான். இக்காட்சியைக் காணும் ஒருவர் திருமாலின் ஆசனத்தின் கீழே ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது கையை கடக முத்திரையாகவும், இடது கையை உயர்த்தி போற்றி முத்திரையாகவும் வைத்துள்ளார். விஷ்ணு பகவான் முடிசூட்டுவது இரண்டாம் நந்திவர்மன் எனக் கருதுவோரும் உண்டு.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
கருடானுக்கிரக மூர்த்தி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |