சிற்பம்
வாமனர்
வாமனர்
சிற்பத்தின் பெயர் | வாமனர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
விளக்கம்
பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
வாமன அவதாரம் என்பது மாலியத்தார் (வைணவர்கள்) முழுமுதற் கடவுளாகக் கருதும் திருமால் (விஷ்ணு) நில உலகில் தோன்றிய ஐந்தாம் அவதாரம் ஆகும். அவதாரம் என்றால் இறைவன் மனித அல்லது வேறு ஒரு உருவில் இவ்வுலகில் பிறத்தல். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும். இந்த அவதாரத்தில் இவர் கேரளத்தில் பிராமண குலத்தில் பிறந்தார். இவர் குள்ளமான உருவம் கொண்டவராய் இருந்தார். இவர் உபேந்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். தீவிர விஷ்ணு பக்தன். ஆயினும் அவன் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒருமுறை உலகை வெல்ல யாகம் ஒன்று நடத்த திட்டமிட்டான். அதனை முறியடிக்க விஷ்ணு மூன்றடி வாமன உருவத்துடன், யாக சாலைக்கு வந்து அவனிடம் மூன்றடி மண் கேட்டார். மிகுந்த செருக்குடன் இருந்த மாபலி தர சம்மதம் தந்தான். பகவான் விஷ்வரூபம் எடுத்து வானை ஒரு காலாலும், மண்ணுலகை ஒரு காலாலும் அளக்க, மூன்றாமடியை அவனது தலையில் வைத்து அவனது அகந்தையை ஒழித்தார். வைகுண்டப் பெருமாள் கோயிலில் அமைந்த வாமன வடிவம் மாவலியை விட சற்று உயரமாய்க் காட்டப்பட்டுள்ளது. குடை வைத்துள்ளார். கோவண ஆடை உடுத்தியுள்ளார். அருகில் மாவலி இடது கையை உயர்த்தி போற்றுகின்றார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
வாமனர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |