சிற்பம்
நான்முகன்
சிற்பத்தின் பெயர் நான்முகன்
சிற்பத்தின்அமைவிடம் புள்ளமங்கை
ஊர் பசுபதி கோயில்
வட்டம் பாபநாசம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன்
விளக்கம்
அண்ணாமலையார் சிற்பத் தொகுதியில் வலது புறம் நிற்கும் நான்முகன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
இலிங்கோத்பவரின் வலதுபுறம் நான்முகன் நின்ற நிலையில் முழு உருவச் சிற்பமாகக் காட்டப்படுகிறார். இடதுகாலை நன்கு ஊன்றி, வலதுகாலை சற்று முன்னோக்கி வைத்து உடலை பின்புறம் சாய்த்தவாறு திரிபங்க நிலையில் உள்ள நான்முகனின் உயரமானது இலிங்கோத்பவருக்கு சமமாக உள்ளது. ஜடாமகுடம், நீள் காதுகளில் குண்டலம், கழுத்தில் சரப்பளி, கைகளில் கேயூரம், மூன்று முன்வளைகள், உதரபந்தம் இவைகளோடு மார்பின் குறுக்காகச் செல்லும் முப்புரிநூல் இரண்டாக மடிக்கப்பட்டு பிரம்மமுடிச்சு பின்புறம் செல்கிறது. மேற்கைகளின் விரல்களுக்கிடையில் இலகுவாக அக்கமாலை, கெண்டி ஏந்தி, கீழ்க்கைகளில் வலது ஊரு முத்திரையும், இடதில் புத்தகமும் கொண்டு, கணுக்கால் வரை நீண்ட ஆடை உடுத்தி காலில் பாடகம் அணிந்துள்ளார். ஆடையின் முடிச்சுகள் இருபுறமும் இடைக்குக் கீழே விரிந்து கணுக்கால் வரை தொங்குகிறது. இடையில் முத்தாலான அணி தென்படுகிறது. முகப்போடு உள்ள இடைவார் நடுவில் முடிச்சுடன் காணப்படுகிறது. நான்முகனின் எழிலான மூன்றுமுகம் தெரியுமாறு உள்ளது. மூடிய விழிகளுடன், கூரிய நாசி, செதுக்கிய உதடுகள் என எழிலார்ந்த சாந்தமான முகத்தைக் கொண்டு, இளம் ஆடவரின் உடற்கட்டையும் வனப்பையும் பெற்றுள்ளார்.
குறிப்புதவிகள்
நான்முகன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்