சிற்பம்
காவற்பெண்டிர்
காவற்பெண்டிர்
சிற்பத்தின் பெயர் | காவற்பெண்டிர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | பிற வகை |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
விளக்கம்
கருவறை விமானத்தின் காவலராய் நிற்கின்ற காவற்பெண்டிர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பல்லவ குலத்தின் மிகவும் எழில் வாய்ந்த இரு பெண்கள் காவற் பெண்டிராய் நிற்கின்றனர். கைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லாத இம்மங்கையர் எழில் தவழும் இன்முகத்துடன் ஒருவருக்கொருவர் வேறுபட்ட அலங்காரத்துடன் காட்டப்பட்டுள்ளனர். இடது புறம் உள்ள பல்லவ நங்கை இடது காலை ஊன்றி, வலது காலை சற்று நகர்த்தி வளைத்து ஒயிலாக திரிபங்க நிலையில் நின்றபடி இடது கையை கடக முத்திரையிலும், வலது கையை ஏந்து கையாகவும் கொண்டுள்ளார். கரண்ட மகுடம் தரித்துள்ளார். கழுத்தில் கண்டிகை, சரப்பளி, ஆரம் அணிந்து, காதுகளில் பனையோலைச் சுருளும், கைகளில முன்வளைகளும், கால்களில் கழல்களும் அணிந்துள்ளார். வலதுபுறமிருக்கும் மங்கையோ இடது கையை இடையில் வைத்தவாறு வலது கையை மடக்கி இடையில் ஊன்றியுள்ளார். இப்பெண்மணி உடலை நேராகவும், கால்களையும், முகத்தையும் பக்கவாட்டிலும் வைத்துள்ளார். முன்னவரை விட இம்மங்கையின் தலையணி சற்று வேறுபட்டுள்ளது. காதுகளில் வளையங்கள், கழுத்தில் சரப்பளி, கைகளில் முன்வளைகள் ஆகிய அணிகளை அணிந்துள்ளார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
காவற்பெண்டிர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |