சிற்பம்

விஷ்ணு கருட சேவை

விஷ்ணு கருட சேவை
சிற்பத்தின் பெயர் விஷ்ணு கருட சேவை
சிற்பத்தின்அமைவிடம் வைகுண்டப் பெருமாள் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன்
விளக்கம்
விஷ்ணு கருடன் மேல் அமர்ந்து காட்சி தருதல்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
பெருமாள் பறக்கும் நிலையில் உள்ள கருடன் மேல் வலது காலை மடக்கி குத்துக்காலிட்டு இடது காலை தொங்கவிட்டு உத்குடிகாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். வலது கால் கருடனின் வலது தோள் மீது உள்ளது. தொங்கவிடப்பட்ட இடது காலை கருடன் தன் இடது கையால் தாங்குகிறார். கருடனின் வலது கை இறைவனின் குத்துக்காலை அணைவாகத் தாங்குகிறது. நான்கு திருக்கைகள் கொண்ட திருமால் பின்னிரு கைகளில் பிரயோகச் சக்கரம், சங்கு ஆகியவற்றை ஏந்தியுள்ளார். முன்னிரு கரங்களில் வலது கை வலது முழங்காலின் மீது டோல ஹஸ்தமாகவும் (தொங்கவிடப்பட்ட கை) இடது கை கடக முத்திரையாகவும் காட்டப்பட்டுள்ளன. திருமாலின் கழுத்தணிகள் சிதைந்துள்ளன. முப்புரி நூல், வயிற்றில் உதரபந்தம், கைகளில் முன் வளைகள், கால்களில் கழல்கள் ஆகியன அணிந்துள்ளார். கிரீடமகுடமணிந்துள்ள தலை ஏறிட்டு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. இறைவனைத் தாங்கியுள்ள கருடன் மனித வடிவத்தில் காட்டப்பட்டள்ளார். கிரீடமகுடம், கழுத்தில் சரமாலை, மார்பில் முப்புரிநூல், ஆகியன அணிந்துள்ளார். அரையாடை அணிந்துள்ள கருடன் தலையை இடதுபுறம் சாய்த்தவாறு பறக்கின்றார். பெருமாளுக்கு மேலே இரு கந்தர்வர்கள் பறந்தவாறு போற்றுகின்றன்றனர். கீழே மூவர் ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்த நிலையில் கைகளை உயர்த்தி போற்றுகின்றனர். இவர்களின் மேலே மற்றொருவரும் இக்காட்சியைக் கண்டு புன்னகைக்கின்றார்.
குறிப்புதவிகள்
விஷ்ணு கருட சேவை
சிற்பம்

விஷ்ணு கருட சேவை

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்