சிற்பம்
நான்முகன்
சிற்பத்தின் பெயர் நான்முகன்
சிற்பத்தின்அமைவிடம் ஆனந்தவல்லி உடனுறை தஞ்சபுரீசுவரர் கோயில்
ஊர் வெண்ணாற்றங்கரை
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் வடபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
விளக்கம்
a:1:{i:0;s:2416:"தஞ்சை நகரின் வெண்ணாற்றங்கரைப் பகுதியில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை தஞ்சபுரீசுவரர் என்னும் கலைக்கோயில் முற்காலச் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலின் கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியன தனித்துவம் வாய்ந்தவை. இக்கோயிலில் தென்முகக்கடவுள், நான்முகன், கொற்றவை, கணபதி, ஆடல்வல்லான், உமையொருபாகன் ஆகிய முற்காலச் சோழர் கலைப்பாணியிலமைந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறை விமானத்தின் வடபுற தேவகோட்டத்தில் அமைந்துள்ள நான்முகனின் அமர்ந்த நிலை சிற்பம் மிகவும் எழில் வாய்ந்ததாக திகழ்கிறது. குடையின் கீழ் இருபுறமும் சாமரங்கள் விளங்கிட, தாமரைப்பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் நான்முகன் நாலிரு புயங்களுடன் காட்சியளிக்கிறார். மேலிரு கரங்களில் அக்கமாலையும் கெண்டியும் விளங்க, சுகாசனராய், கணுக்கால் வரை ஆடையணிந்து, பெருஞ்சடைமகுடராய், நான்முகங்களுடன் திகழ்கிறார். அண்ணலின் முன் வலது கை சிதைந்துள்ளது. முன் இடது கையை இடது தொடையில் மேல் வைத்துள்ளார். முப்புரிநூலும், அணிகளும் சிறந்தனவாக விளங்குகின்றன. ";}
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ள தஞ்சபுரீசுவரர் கோயில் சிற்பங்களில் குறிப்பிடத்தகுந்த நான்முகன் சிற்பம் இயற்கையான எழிலுடன் அமைதி தவழும் உருவமைதியுடன் படைக்கப்பட்டுள்ளது என்பதே இச்சிற்பத்தின் சிறப்பாகும்.
குறிப்புதவிகள்
நான்முகன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்