Back
சிற்பம்

வாகீசர் (நான்முகன்)

வாகீசர் (நான்முகன்)
சிற்பத்தின் பெயர் வாகீசர் (நான்முகன்)
சிற்பத்தின்அமைவிடம் திருக்கண்டியூர் பிரம்மசிரக் கண்டீசுவரர் கோயில்
ஊர் திருக்கண்டியூர்
வட்டம் திருவையாறு
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறைத் திருச்சுற்று
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு
அளவுகள் / எடை 5 அடி உயரம்
விளக்கம்
சிவ வடிவங்களுள் ஒன்றான வாகீசர் பிரம்மனைக் குறிக்கும். சிவபெருமானைப் போன்று பிரம்மனும் ஐந்து தலைகளைக் கொண்டவர். படைப்புக் கடவுளான பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஒன்றை சிவபெருமான் கொய்தவுடன் நான்முகனாய் படைப்புத் தொழிலைத் தொடங்குகிறார் என்பது தொன்மம். வாகீசர் சிற்பங்கள் திருவையாறு சுற்றியுள்ள பகுதிகளில் அதிகஅளவில் கிடைத்துள்ளன. பிரம்மனின் சிரம் கொய்த சிவனின் அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றான திருக்கண்டியூர் திருவையாறு செல்லும் வழியில் அமைந்துள்ளது. வாகீசரின் இச்சிற்பம் திருக்கண்டியூர் பிரம்மசிரக்கண்டீசுவரர் கோயிலில் வழிபாட்டில் உள்ளது. தாமரைபீடத்தில் சுகாசனத்தில் அமர்ந்த கோலம். நான்முகனாய் நான்கு திருக்கைகளில் அக்கமாலையும், தாமரை மலர்களும் விளங்கிட அமைதி தவழும் முகத்தினராய் சோழர்கால கலைப்பாணியில் வாகீசர் விளங்குகிறார்.
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இத்தலம் 12-வது தலம் ஆகும். அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் ஆகும். சிவபெருமானின் எட்டு வீரச்செயல்களில் முதலாவதான பிரம்மனின் தலையை கொய்த தலம் இதுவாகும். இங்கு இறைவன் பிரம்மசிரகண்டீசுவரர் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்தில் நான்முகனின் சிற்பம் பெரிய அளவில் தாமரை மீது அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இச்சிற்பத்தின் உருவமைதியும், கலைப்பாணியும் தனித்துவம் வாய்ந்தது.  திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த  ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஐந்தாவது தலமாகும். 
குறிப்புதவிகள்
வாகீசர் (நான்முகன்)
சிற்பம்

வாகீசர் (நான்முகன்)

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்