சிற்பம்
நான்முகன்
சிற்பத்தின் பெயர் நான்முகன்
சிற்பத்தின்அமைவிடம் குறங்கணி நாதர் கோயில்
ஊர் சீனிவாசநல்லூர்
வட்டம் லால்குடி
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன்
விளக்கம்
கருவறை விமானம் வடக்கு தேவகோட்டத்தில் நிற்கும் நான்முகன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
பிரம்மா மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். பிரம்மா கலைமகள் என்று அழைக்கப்பெறும் சரஸ்வதியுடன் சத்ய லோகத்தில் வசிப்பவர். இவரின் மனதிலிருந்து முதலில் தோன்றிய, சனகர்,சனந்தனர்,சனாதனர், சனத்குமாரர், என நான்கு மகன்கள் இல்லற தர்மத்தை கடைப்பிடிக்காது துறவறத்தில் ஈடுபட்டு ஞானிகளாக மாறிவிட்டனர். இவர் நான்கு தலையுடனும், நான்கு கைகளையும் கொண்டுள்ளார். அத்துடன் வேதங்களை வைத்து படைத்தல் தொழிலை செய்கிறார். இவருடைய வாகனமாக அன்னப் பறவை உள்ளது. நான்கு முகங்களை உடையவர் என்பதால் நான்முகன் என்றும், பிரம்மத்திலிருந்து திருமால் தோன்றிட அவருடைய தொப்புளிலிருந்து தோன்றியதால் பிரம்மா என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மன் ஹிரணிய கர்ப்பத்திலிருந்து தோன்றினார் என்று புராணங்கள் கூறுகின்றன. ஹிரண்யம் என்பதுபொன்னையும் கர்ப்பம் என்பது கருவையும் குறிப்பதாகும். பிரம்மன் விஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து வந்த தாமரை மலரின் மீது தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இவர் தானாகத் தோன்றியவர் எனவே இவர் பிரபஞ்சத்தின் முதல்வர் என்றும் பிதாமகன் என்றும் அழைக்கப்படுவார். கருவறை விமானத்தின் வடக்குப்புறம் உள்ள தேவகோட்டத்தில் பிரம்மன் சமபாதத்தில் நேராக நின்றநிலையில் உள்ளார். மூன்று முகங்கள் மூடிய விழிகளோடு தெரிகின்றன. ஜடாமகுடம், நீள் காதுகளில் பத்ரகுண்டலங்கள், கழுத்தில் வேலைப்பாடுள்ள இரு அணிகள், கைகளில் கேயூரம், முன் வளைகள், நடுமார்பில் பிரம்ம முடிச்சுடன் கூடிய முப்புரி நூல், வயிற்றில் உதரபந்தம், இருபுறமும் முடிச்சுகளோடு கணுக்கால் வரை நீண்டு தொங்கும் ஆடை, ஆடையணி வகைகளைக் கொண்டு விளங்குகிறார். நான்கு திருக்கைகளில் மேலிருகைகளில் அக்கமாலையும், கெண்டியும் விரல்களில் உள்ளன. கீழிரு கைகளில் இடது கை தொடையில் வைத்தபடி ஊரு முத்திரையாக அமைந்துள்ளது. வலதுகை சிதைந்துள்ளது. வலது கை அபய முத்திரையாக இருக்கலாம்.
குறிப்புதவிகள்
நான்முகன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்