சிற்பம்
பல்லவ மன்னன் வேட்டைக் காட்சி
பல்லவ மன்னன் வேட்டைக் காட்சி
சிற்பத்தின் பெயர் | பல்லவ மன்னன் வேட்டைக் காட்சி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | அரச உருவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
விளக்கம்
பல்லவ மன்னன் கானகத்தில் யானை, காட்டெருமை மற்றும் மான்களை வேட்டையாடும் காட்சி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மன்னன் வேட்டையாடும் காட்சி சிற்பத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. மன்னன் பாய்ந்த நிலையில் அம்பெய்துகிறான். முகம் சிதைந்துள்ளது. தலைக்கு மேலே வெண்கொற்றக்குடை உள்ளது. காலடியில் யானை ஒன்று படுத்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. இரண்டு மான்கள் திரும்பிய நிலையில் காட்டப்பட்டுள்ளன. கானகத்தில் வாழும் இருமுனிவர்கள் இக்காட்சியைக் காண்கின்றனர். முதலாமர் வயதில் முதிர்ந்தவர். தாடி, மீசையுடன் ஜடாபாரம் கொண்டுள்ளார். இடது கையில் தண்டத்தை ஏந்தியும், வலது கையால் வாழ்த்தையும் ஒலிக்கிறார். அவருக்குப் பின்னால் நிற்பவர் சற்று இளையவர். இருவருக்கும் முகம் சிதைந்துள்ளன. இக்காட்சிக்கு மேலே மூவர் இந்த அரிய யானை வேட்டைக் காட்சியைக் கண்டு வியப்பு முத்திரை காட்டுகின்றனர். மூவரும் ஒருவருக்கொருவர் உடலமைப்பில் வேறுபட்டவராயும், தலையணி மற்றும் பிறவணிகளில் வேறுபட்டவராயும் காட்டப்பட்டுள்ளனர்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
பல்லவ மன்னன் வேட்டைக் காட்சி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |