சிற்பம்

பல்லவ அரசன்

பல்லவ அரசன்
சிற்பத்தின் பெயர் பல்லவ அரசன்
சிற்பத்தின்அமைவிடம் வைகுண்டப் பெருமாள் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை அரச உருவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன்
விளக்கம்
அரசன் தன் பட்டத்தரசியுடன் அமர்ந்து அமைச்சருடன் ஆலோசிக்கும் சிற்பக் காட்சி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
பல்லவ மன்னன் அவையில் சுகாசனத்தில் வீற்றிருக்கிறான். வலது கையை வலது தொடையில் வைத்தும், இடது கையை கடக முத்திரையிலும் (நண்டு பிடி) கொண்டுள்ளான். நெற்றியில் கண்ணி மாலை திகழ்கிறது. நீள்காதுகளில் குண்டலங்கள் விளங்குகின்றன. கழுத்தில் சரப்பளியும், கண்டிகையும் உள்ளன. மார்பில் யக்ஞோபவீதம் (முப்புரிநூல்) செல்கிறது. மன்னனின் மேற்புறம் இருவர் சாமரத்தை கையில் பிடித்து தோளில் சாய்த்தபடி நிற்கின்றனர். அரசனின் வலதுபுறம் நிற்பவர் தன் இடது கையாலும், இடது புறம் நிற்பவர் வலது கையாலும் கடக முத்திரை காட்டியுள்ளனர். அரசனின் வலது புறத்தில் அவன் தேவி அமர்ந்துள்ளாள். தேவி இடது கையை நித்ரா முத்திரையாக பீடத்தில ஊன்றியபடியும், வலது கையை கடக முத்திரையாகவும் கொண்டிருக்கின்றார். மன்னனின் இடது புறத்தில் பணிவாக வணங்கிய நிலையில் அரசன் கூறுவதை கேட்பவராய் நிற்பவர் அமைச்சராய் இருக்கலாம். இக்காட்சியின் அருகே கோயிலொன்று உள்ளது. கோயிலின் அருகில் அமர்ந்த நிலையில் யோகி ஒருவரும் அவர் அருகில் பெண் ஒருவரும் காட்டப்பட்டுள்ளனர். இவர்கள் அரசனும் அரசியுமாயிருக்கலாம். இக்காட்சியின் கீழே மூன்று வீரர்களும் அசுவமேத குதிரை ஒன்றும் காட்டப்பட்டுள்ளனர். இச்சிற்பத் தொகுதியில் காட்டப்படும் அமர்வு நிலை, ஆடையணிகள் ஆகியவற்றைக் காணும் பொழுது பல்லவர் கால சமூகப் பண்பாடு, மரபு நிலை, கலாச்சாரம் நன்கு விளங்குகிறது.
குறிப்புதவிகள்
பல்லவ அரசன்
சிற்பம்

பல்லவ அரசன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்