சிற்பம்

நான்முகன்

நான்முகன்
சிற்பத்தின் பெயர் நான்முகன்
சிற்பத்தின்அமைவிடம் குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன்
விளக்கம்
கருவறை விமானம் வடக்கு தேவகோட்டத்தில் நிற்கும் நான்முகன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
கருவறை விமானத்தின் வடக்குப்புறம் உள்ள தேவகோட்டத்தில் பிரம்மன் தாமரைப் பீடத்தின் மேல் சமபாதத்தில் நேராக நின்றநிலையில் உள்ளார். மூன்று முகங்கள் மூடிய விழிகளோடு தெரிகின்றன. ஜடாமகுடம், நீள் காதுகளில் வலது காதில் மகர குண்டலமும், இடது காதில் பத்ரகுண்டலமும், கழுத்தில் வேலைப்பாடுள்ள இரு அணிகள் கைகளில் கேயூரம், முன் வளைகள், மார்பில் கூடிய முப்புரி நூல், வயிற்றில் உதரபந்தம், நடுவிரல் தவிர எல்லாவிரல்களிலும் வளையங்கள், இருபுறமும் முடிச்சுகளோடு கணுக்கால் வரை நீண்டு தொங்கும் ஆடை, கால்களில் பாடகம் என ஆடையணி வகைகளைக் கொண்டு விளங்குகிறார். நான்கு திருக்கைகளில் மேலிருகைகளில் வலதில் அக்கமாலையும், இடதில் கெண்டியும் விரல்களுக்கு மேல் உள்ளன. கீழிரு கைகளில் இடது கை ஊரு முத்திரையாகவும், வலது கை அபய முத்திரையாகவும் உள்ளன. மிகவும் இளையராகவும், எழில்மிகு தோற்றம் உடையவராயும், புன்னகை தவழும் முகத்துடன் நான்முகன் காட்சியளிக்கிறார். முற்காலச் சோழர்களின் எழிலார்ந்த நுணுக்கமான கலைப்பாணிக்கு இந்த நான்முகன் சிற்பம் சிறந்த சான்றாகும். இந்த நான்முகன் சிற்பத்தை வடித்த சிற்பிதான் தஞ்சாவூர் புள்ளமங்கையிலும் பிரம்மன் வடிவத்தை செதுக்கியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
குறிப்புதவிகள்
நான்முகன்
சிற்பம்

நான்முகன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்