சிற்பம்
கின்னரர்
கின்னரர்
சிற்பத்தின் பெயர் | கின்னரர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
மாமல்லையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவம் என்னும் புடைப்பு சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டுள்ள கின்னரன்-கின்னரி இணைகள்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இடுப்பிற்கு கீழ் பறவை உருவமும், இடுப்பிற்கு மேல் மனித உருவமும் கொண்ட ஆண் மற்றும் பெண் பாலினத்தவர்கள் என்று கூறப்படுகிறது. கின்னரர் என்பார் குதிரையுனுடைய முகமும் மனிதருடைய உடலும்பெற்ற ஒரு தேவசாதி; இத்தேவசாதியினர் எப்போதும் ஆணும் பெண்ணுமாகவே யிருப்பர். கின்னரம் என்னும் இசைக் கருவியை வைத்துப் பாடிக்கொண்டிருக்கும் காரணத்தினால் கின்னரர் என்னப் பெற்றனர். இசையின் தன்மையை அசையும் பொருள் அசையாப்பொருள் ஆகிய எல்லாப்பொருள்களும் அறியும் என்பர். பதினெண் கணங்களுள் ஒரு வகையினர். கின்னரர்களின் தலைவர் தும்புரு ஆவார். இவர் குதிரை முகங் கொண்டவர். இசைக்கலையில் வல்லவர். இச்சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டுள்ள கின்னர-கின்னரி இணைகள் மனித உடலையும், பறவைக் கால்களையும், இறக்கைகளையும் கொண்டுள்ளன. கின்னரன் கையில் இசைக்கருவியான கின்னரியை மார்போடு சாய்த்துள்ளான். தலையில் அழகிய மகுடம் அணிந்துள்ள கின்னரன் செவி, கழுத்து. கைகள் இவற்றில் அணிகளைக் கொண்டுள்ளான். கின்னரனுக்கு அருகில் அவனை நோக்கியபடி நிற்கும் கின்னரி கரந்தை மகுடம் கொண்டுள்ளாள். மார்பில் குஜபந்தம் காட்டப்பட்டுள்ளது. கின்னரி கையில் சிறிய இசைக் கருவியை வைத்துள்ளாள். இருவருக்கும் இடைக்கட்டின் முத்தானைகள் இருபுறமும் பறக்கின்றன. கின்னர இணை மனிதர்களைப் போன்றே ஆடையணிகளைக் கொண்டுள்ளனர்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
கின்னரர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |