சிற்பம்
மலைவாழ் பழங்குடியினர்
மலைவாழ் பழங்குடியினர்
சிற்பத்தின் பெயர் | மலைவாழ் பழங்குடியினர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வாழ்வியல் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
மாமல்லையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவம் என்னும் புடைப்பு சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டுள்ள தொல்மாந்தர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கானகத்தில் பாயும் புலிக்கு நடுங்கியபடி இருவர் அமர்ந்துள்ளனர். அவர்களின் நடுக்கத்தைக் காணும் போது நடுக்கத்திற்கான மெய்மைத் தோற்றம் புலப்படுகிறது. இவர்கள் காட்டிற்குள் தவறிச் சென்றவர்களாக இருக்கலாம். பயத்துடன் கால்களை குத்திட்டு அமர்ந்தபடி, செய்வதறியாது உயிரச்சத்துடன் காணப்படுகின்றனர். அவர்கள் இருவரும் மேற்சட்டை அணிந்துள்ளனர். அது பின்னப்பட்ட கம்பளிச் சட்டை (sweater) ஆக தெரிகிறது. இச்சட்டை முழு நீளக் கைகளைக் கொண்டுள்ளது. இக்கம்பளிச் சட்டையை இரு கைகளாலும் பிடித்தபடி உள்ளனர். இது குளிரால் நடுங்குவதைப் போலவும் தெரிகின்றது. இமயமலையின் உறை பனிக்குளிரால் நடுங்குகின்றனர் போலும்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
மலைவாழ் பழங்குடியினர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 49 |
பிடித்தவை | 0 |