சிற்பம்

நாகர்கள்

நாகர்கள்
சிற்பத்தின் பெயர் நாகர்கள்
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை விலங்கு உருவங்கள்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
மாமல்லையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவம் என்னும் புடைப்பு சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டுள்ள நாகர்கள்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
இயற்கையாக நடுவில் பிளவுபட்டு இரு தொகுதிகளாக அமைந்துள்ள பாறையின் பிளவின் கீழிருந்து நாகராஜனும், நாகக் கன்னியும், நாகமும் வெளிவருவதாக சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. நாகலோகம் என்பது கீழுலகங்கள் ஏழினுள் ஒன்றாகும். பாதலம் என்று அதற்கு மற்றொரு பெயருண்டு. இங்கு வசிக்கும் பன்னிரண்டாயிரம் கோடி நாகங்களின் தலைவனாக விளங்கும் வாசுகி, கத்ரு என்னும் நாகஅன்னையின் புதல்வனாவான். பாற்கடலைக் கடையும் பொழுது வாசுகி நாகமே நாணாக அமைந்திருந்தது. மாமல்லையின் அர்ச்சுனன் தபசு என்னும் சிற்பத்தொகுதியில் காட்டப்படும் மேலேழும்பும் நாகங்களில் முதலில் வருவது வாசுகி எனப்படும் நாகர்களின் தலைவன் ஆவான். மனித மேலுடலும், நாக கீழுடலும் இணைந்த உருவமாக வாசுகி காட்டப்பட்டுள்ளான். அவன் தலைக்கு மேலே ஏழு தலை கொண்ட நாகம் ஒன்று குடை பிடிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. அல்லது அவன் நாகம் என்பதற்கான படிமவியலில் இவ்வாறு காட்டப்பட்டிருக்கலாம். நாக அரசனுக்குக் கீழே நாகராணி எழும்பி வருகிறாள். அவளுக்குக் கீழே நாகம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பங்கள் மூன்றும் ஒன்றின் கீழ் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளன. நாகங்கள் பாதாளலோகத்திலிருந்து எழுந்து மேலேறி வருவதாக இக்காட்சி அமைகிறது. நாகங்கள் ஆண்ட பூமி - காஷ்மீரின் பந்தேர்வாஹ் மலைப் பள்ளத்தாக்குப் பகுதி என அறியப்படுகிறது. இப்பகுதி இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு பகுதியாகும். அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகுதி சித்தரிக்கும் இடம் இமயமலை அடிவாரமேயாகும்.
குறிப்புதவிகள்
நாகர்கள்
சிற்பம்

நாகர்கள்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 23
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்