சிற்பம்

ஆயர் குடும்பம்

ஆயர் குடும்பம்
சிற்பத்தின் பெயர் ஆயர் குடும்பம்
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
மாமல்லபுரத்தில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் அமைந்துள்ள கோவர்த்தனன் புடைப்புச் சிற்பத் தொகுதியில் காணப்படும் ஆயர் குடும்பம்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கோவர்த்தனன் சிற்பத் தொகுதியில் ஆயர் குடும்பம் ஒன்று கவி நயத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. மழை பெய்கிறது. இடையன் கிரிதரன் தூக்கிப் பிடித்துள்ள மலைக்கடியில் ஒண்ட ஓடுகிறான். அவனுக்கு குடும்பம் உள்ளது. மனைவியும் மகவும் உள்ளனர். மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு ஒடுகின்றான். அவன் மனைவியோ வலது இடையில் தன் மகவைச் சுமந்தபடி கணவன் இழுத்த இழுப்பிற்கு வளைந்து ஓடுகிறாள். குழந்தை தாயை இறுகப் பற்றியுள்ளது. தலையில் கட்டிய பாகையுடனும், முகத்தில் முறுக்கிய மீசையுடனும் ஆயன் காட்டப்பட்டுள்ளான். இடது தோளில் ஆநிரை மேய்க்கும் கோலை சாய்த்துள்ளான். இக்காட்சி தமிழரின் முல்லை நிலக் காட்சி என்பதில் சிறிதும் ஐயமில்லை.
குறிப்புதவிகள்
ஆயர் குடும்பம்
சிற்பம்

ஆயர் குடும்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 25
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்