சிற்பம்

வேடுவர்

வேடுவர்
சிற்பத்தின் பெயர் வேடுவர்
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வாழ்வியல்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
மாமல்லையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவம் என்னும் புடைப்பு சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டுள்ள வேடுவர்கள்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
இமய மலைச் சாரலில் உள்ள கானகப் பகுதி இங்கு காட்டப் பெறுகிறது. மரங்களும், விலங்குகளும் அடர்ந்த கானகத்தில் வேடர்கள் வீரமோடு நிற்கின்றனர். சிங்கம் ஒன்று பாய்கிறது. மரத்தின் அருகே வேடன் வில்லினை ஊன்றியபடி வலது காலை ஊன்றி, இடது காலை உயர்த்தி பாறையின் மீது வைத்து ஊர்த்துவஜானுவில் நிற்கிறான். தோலாடை இடையில் உடுத்தியுள்ளான். காதுகளில் குண்டலங்கள் அணிந்துள்ள வேடுவன் முறுக்கிய மீசை கொண்டுள்ளான். தலையில் அளகசூடகம் என்னும் தலைக்கோலம் விளங்குகிறது. வேடர்களுக்குரிய கடுந்தன்மை அவன் முகத்தில் பிரதிபலித்தாலும் பட்டறிவு கொண்ட பார்வையால் நோக்குகிறான். இடது கையில் வில்லைப் பிடித்தபடியும், வலது கையை இடையில் வைத்தபடியும் மிகவும் இயல்பாக நிற்கிறான். வேடன் உயிர் பெற்று நிற்பது போல் தோன்றுகிறது. அருகில் உள்ள ஒரு மரத்தின் கீழே மற்றொரு வேடன் நிற்கிறான். இவர் முந்தையவரை விட சற்று வயதில் முதிர்ந்தவராக காணப்படுகிறார். மீசையுள்ள இவ்வேடருக்கும் இளையவரைப் போலவே தலைக்கோலம் அளகசூடகமாய் அமைந்துள்ளது. கோவண ஆடை உடுத்தியுள்ளார். முந்தையவரைப் போலவே ஊர்த்துவஜானுவில் நிற்கிறார். வலது கை இடையில் உள்ளது. இடது கையில் வில்லினைத் தூக்கி தோள்களில் நிறுத்தியுள்ளார். இவருக்கு முகத்தில் தெரியும் வெளிப்பாடு முன்னவரைப் போன்றே உள்ளது.
குறிப்புதவிகள்
வேடுவர்
சிற்பம்

வேடுவர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்