சிற்பம்
சிம்மம்
சிம்மம்
சிற்பத்தின் பெயர் | சிம்மம் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | விலங்கு உருவங்கள் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
மாமல்லையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவம் என்னும் புடைப்பு சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டுள்ள விலங்கினங்களில் அதிக எண்ணிக்கையில் இடம் பெறும் சிங்கம்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இமய மலைச் சாரலில் உள்ள கானகப் பகுதி இங்கு காட்டப் பெறுகிறது. மரங்களும், விலங்குகளும் அடர்ந்த கானகத்தில் அங்கங்கு அமைந்துள்ள இயற்கையான குகைகளில் சிங்கங்கள் கர்ஜித்தபடியும், ஒரு காலைத் தூக்கி பாய்ந்தபடியும், பதுங்கிப் பாய்வது போலவும் காட்டப்பட்டுள்ளன. இச்சிற்பத் தொகுதியில் இடம் பெற்றுள்ள விலங்குகளில் சிங்கங்களே அதிக எண்ணிக்கையில் காட்டப்பெறுவது கானக வளத்தினைக் குறிக்கிறது. மிகவும் பரந்த, அடர்ந்த காடுகளிலேயே சிங்கங்கள் அதிக எண்ணிக்கையில் வாழும். இங்கு குறிக்கப்பெறும் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள கானகம் கொடிய விலங்கான சிங்கங்களை அதிகம் பெற்றுள்ளதில் வியப்பேதுமில்லை.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
சிம்மம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |