Back
சிற்பம்

இடைய இணையர் (ஆயர் குல இணையர்)

இடைய இணையர் (ஆயர் குல இணையர்)
சிற்பத்தின் பெயர் இடைய இணையர் (ஆயர் குல இணையர்)
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
மாமல்லபுரத்தில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் அமைந்துள்ள கோவர்த்தனன் புடைப்புச் சிற்பத் தொகுதியில் காணப்படும் ஆயர் குல இணையர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கோவர்த்தனன் சிற்பத் தொகுதியில் ஆயர் இணையர் இளையராக காட்டப்பட்டுள்ளனர். திருமண நாளில் மங்கையின் கைத்தலம் பற்றிய தலைவன் துன்ப வேளையில் அவளைத் தவிக்க விடுவனோ? பற்றிய கை இறுகுகிறது. மழையிலிருந்து மனையாளை காக்க வேண்டிய கடன் கொண்ட வீரத்திருவுருவாய் ஓடிய நிலையில் ஆயன். தலையில் தலைப்பாகையும், காதுகளில் பத்ரகுண்டலமும், மகர குண்டலமும் அணிந்தவனாய், முறுக்கிய மீசை கொண்டவனாய் காட்சியளிக்கிறான். இடையில் இடைக்கட்டுடன கூடிய அரைக்காற் சட்டை அணிந்துள்ளான். தலைவியும் பாதம் தொடர்ந்து ஓடுகிறாள். அளகசூடம் என்னும் தலைக்கோலத்தைக் கொண்டவளாகவும், நீள் செவிகளில் மகர, பத்ர குண்டலங்களை அணிந்தவளாகவும் காட்சியளிக்கிறாள். கழுத்தில் இரட்டை ஆரங்கள் அணி செய்கின்றன. முன் கைகளில் வளைகள் அணிந்துள்ளாள். இடையில் ஆடையை இடது கையால் பிடித்துள்ளாள். ஓடுவதினால் ஆடை நெகிழ்வதைத் தடுப்பதாக கை இடையாடையைப் பிடித்துள்ள தன்மையை மிக மானுடரின் நுட்பமான செயல்பாடுகளை சிற்பத்தில் வடித்துள்ள சிற்பி முல்லை நில வாழ்க்கையை நன்கு அறிந்தவன் என்று துணியலாம். கண்ணால் கண்டதை காட்சிப்படுத்திய கலை நுட்பம், காலத்தால் அழியவொண்ணாதது.
குறிப்புதவிகள்
இடைய இணையர் (ஆயர் குல இணையர்)
சிற்பம்

இடைய இணையர் (ஆயர் குல இணையர்)

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்