சிற்பம்

பல்லவ அரசனும் அரசியும்
சிற்பத்தின் பெயர் | பல்லவ அரசனும் அரசியும் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | அரச உருவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
பல்லவ அரசனும் அரசியும் நிற்கும் கோலம்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பல்லவ மன்னனும், அவன் தேவியும் பகுப்புக் கோட்டங்களில் காட்டப்பட்டுள்ளனர். சிவபெருமான் இடபாந்திகராக நடுவில் உள்ள கோட்டத்தில் உள்ளார். அக்கோட்டத்திற்கு இருபுறமும் அமைந்த இரு கோட்டங்களில் பல்லவ அரசனும், அவன் தேவியும் இணைகளாக நின்றபடி உள்ளனர். பல்லவ மன்னன் நீண்ட நெடிய உருவம் கொண்டுள்ளான். வலது கையை இடையில் வைத்தவாறும், இடது கையை கடக முத்திரை காட்டியும் நிற்கும் பல்லவனுக்கு மார்பில் உள்ள முப்புரிநூல் வலது முன் கை வழியே செல்கிறது. கழுத்தில் கண்டிகை, அரும்புச்சரம் அழகு செய்கின்றது. கைகளில் தோள்வளைகள், முன்வளைகள் அமைந்துள்ளன. தலையில் கரண்ட மகுடம் போன்ற தலைக்கோலம் காட்டப்பட்டுள்ளது. வலச்செவியில் பத்ர குண்டலம் அணிந்துள்ள மன்னனின் இடைக்கட்டு முடிச்சு இடது பின்புறம் அமைந்து நீண்டு தொங்குகிறது. பல்லவ தேவியும் தலைவனுக்கேற்றவாறு உயரத்துடனும், அங்க அமைவுகளுடனும் உள்ளாள். இருபுறமும் பூரிமம் அமைந்து தலைக்கோலத்தைக் கொண்டுள்ளாள். நீள் செவிகளில் வலதில் மட்டும் பத்ரகுண்டலம் அணிந்துள்ளாள். வலது கை மலரைப் பிடிக்கு கடக முத்திரையைக் கொண்டுள்ளது. வலது கை வலத் தொடையில் உள்ளது. இடைக்கட்டு முடிச்சு இடது பின்புறம் அமைந்து நீண்டு தொங்குகிறது. கால்களில் சிலம்பு அணிந்துள்ளாள். இறைவனுடைய கோட்டத்திற்கு தாங்களே காவலர்களாக இந்த அரச தம்பதியர் நிற்கின்றனர் போலும்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |