சிற்பம்
பலராமன்
சிற்பத்தின் பெயர் பலராமன்
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
மாமல்லபுரத்தில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் அமைந்துள்ள கோவர்த்தனன் புடைப்புச் சிற்பத் தொகுதியில் ஆயனின் தோளை அணைத்தபடி ஆறுதல் கூறும் பலராமர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கோவர்த்தன மலையை தூக்கிப் பிடித்து ஆயர்களைக் காத்த கிருஷ்ணனின் தனயரான பலராமன் ஆயனொருவனின் தோளை ஆதுரமாக அணைத்துள்ளார். இடது காலை ஊன்றி, வலது காலை கல்லின் மீது வைத்தவாறு ஊர்த்துவஜானுவில் நிற்கிறார். பத்ர பூரிமத்துடன் கூடிய கரண்ட மகுடம் அணிந்துள்ளார். செவிகளில் அணிகள் விளங்குகின்றன. கழுத்தில் சரப்பளி அணி செய்கின்றது. மார்பில் முப்புரி நூல், கைகளில் தோள்வளை, மூன்றடுக்கு முன் வளைகள் அணிந்துள்ளார். இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய ஆடையை அணிந்துள்ளார். இடைக்கட்டின் முடிச்சு பின்புறம் அமைந்துள்ளது. அருகில் அவரது ஆறுதலில் கலக்கந்தீர்த்த இடையனோ பணிவுடன் இரு கைகளை கட்டி, பணிவில் வளைந்த உடலுடன் நிற்கிறான். தலையில் முண்டாசு கட்டியுள்ளான் போலும் மீசை உள்ளது. இடைக்கட்டுன் கூடிய அரைக்காற் சட்டை அணிந்துள்ளான். அடுத்து நிற்கும் மங்கை பலராமனின் மனைவி ரேவதியாய் இருக்கலாம். தலைமகளுக்குரிய அணி வகைகளுடன் காட்டப்பட்டுள்ளாள். இருபுறமும் பூரிமத்துடன் கூடிய அளக சூடம் என்னும் தலைக்கோலத்தைக் கொண்டுள்ளாள். கழுத்தில் கண்டிகையும், நீண்ட ஆரமும் அணி செய்கின்றன. காதுகளில் அணிகள் விளங்குகின்றன. இடது கையை தொடையில் வைத்தவாறும், வலது கையை கடக முத்திரை காட்டியவாறும் கிருஷ்ணர் மலையைத் தூக்கி நிற்கும் காட்சியையும், ஆயர்களும், ஆநிரைகளும் அடைக்கலம் புகும் நிகழ்ச்சியையும் காண்கிறாள்.
குறிப்புதவிகள்
பலராமன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்