சிற்பம்
கலிக்கம்ப நாயனார்
கலிக்கம்ப நாயனார்
சிற்பத்தின் பெயர் | கலிக்கம்ப நாயனார் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கலிக்கம்ப நாயனார் ஒரு வணிகர். சிவனடியார்களை உபசரித்து தம் இல்லில் அமுதுண்ண செய்து சிவத்தொண்டு புரிந்து வந்தார். ஒருநாளில் அவர் இல்லத்திற்கு வந்திருந்த சிவனடியார்களின் பாதம் கழுவி வரவேற்கும் வேளையில், அங்கு வந்திருந்த அடியார்களுள் ஒருவர் முன்பு அவர் வீட்டில் ஏவலாளாய் பணிபுரிந்தவர். அவரைக் கண்ட கலிக்கம்பரின் மனைவி அடியவரின் பாதத்தைக் கழுவ தண்ணீர் விட சற்றுத் தயங்கினார். சிவனடியார்க்கு பாதபூசை செய்யும் செயலுக்கு மனைவியின் தயக்கத்தைக் கண்ட கலிக்கம்பர் வெகுண்டு தன் கையில் உள்ள வாளால் மனைவியின் இரு கைகளையும் துண்டித்தார். கலிக்கம்பரின் இவ்வருஞ்செயலை உலகறியச் செய்த அம்மையப்பர் இடப வாகனத்தில் எழுந்தருளி அருள் புரிந்தனர். இச்சிற்பக் காட்சியில் கலிக்கம்ப நாயனார் முழந்தாளிட்டு அடியவர் பாதபூசை செய்ய காலடியில் அமர்ந்த படி இடது கையால் அவர் காலைப் பிடித்துக் கொண்டும் வலது கையால் வாளை ஓங்கிய படியும் காட்டப்பட்டுள்ளார். அருகில் அவர் மனைவி வெட்டுண்ட கைகளுடன் காட்டப்பட்டுள்ளாள்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
கலிக்கம்ப நாயனார்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
சண்டேசுவர நாயனார்
சண்டேசுவர நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
16
|
0
|
0
|
0
சிறப்புலி நாயனார்
சிறப்புலி நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
16
|
0
|
0
|