சிற்பம்
ஆலிங்கனமூர்த்தி
சிற்பத்தின் பெயர் ஆலிங்கனமூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் இராஜராஜன் அகழ் வைப்பகம்
ஊர் தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கோபுரப்பட்டி பாச்சில் அவனீசுவரர் கோயில், திருச்சி.
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன்
விளக்கம்
சிவபெருமானும் உமையும் நின்ற நிலையில் உள்ளனர். அண்ணல் அன்னையை இடது கையால் தோளில் அணைத்தவாறு உள்ளார். முகம் அமைதி தவழும் பாணியில் புன்னகைத்தவாறு காட்டப்பட்டுள்ளது. தேவி தலைவனின் ஆலிங்கனத்தில் நாணமடைந்த முகத்தினளாய் காட்டப்பட்டுள்ளார். இறைவன் நாலிரு புயத்தோடும், இறைவி இரு கரங்களோடும் உள்ளனர். கடவுளின் மேற்கரங்களில் மான் மழு காட்டப்பட்டுள்ளது. வலது முன்கை கடி முத்திரை காட்டியபடி இடையில் அமைந்துள்ளது. இடது முன் கை துணையின் தோளைத் தழுவியுள்ளது. தேவி வலது கையில் மலரைப் பிடித்தும், இடதுகையை தொங்கவிட்டவாறும் உள்ளாள்.எளிமையான ஆடையணிகள் காட்டப்பட்டுள்ளன. இருவரின் தலையலங்காரம் சிறப்பானது. காதணிகளும் கழுத்தணிகளும் குறிப்பிடத்தக்கவை.
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தைச் சேர்ந்த கோபுரப்பட்டி என்னும் ஊரில் உள்ள பாச்சில் அவனீச்சுவரமுடையார் கோயில் முதலாம் பராந்தகச் சோழனால் எடுப்பிக்கப்பட்ட கற்றளியாகும். இச்சிவன் கோயிலில் பல அரிய சிற்பங்கள் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைக்கப்பட்டிருந்தன. இக்கோயில் சிதிலமடைந்திருந்த நிலையில் இங்குள்ள சிற்பங்கள் தஞ்சாவூர் இராஜராஜன் அகழ் வைப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் சிவவடிவங்களுள் ஒன்றான ஆலிங்கனமூர்த்தி ஆகும்.
குறிப்புதவிகள்
ஆலிங்கனமூர்த்தி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்