சிற்பம்
சந்திரன்
சந்திரன்
சிற்பத்தின் பெயர் | சந்திரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
மாமல்லையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவம் என்னும் புடைப்பு சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டுள்ள சந்திரன்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கங்கை பூமிக்கு பாய்ந்து வரும் காட்சியை காண ஓடி வரும் உயிர்க்குலங்களில் ஒன்றாக விசும்பின் கண்ணுள்ள சந்திரனும் பறந்தோடி வருகிறார். பிறையானின் தலைக்கு மேல் பெரிய ஒளிவட்டம் காட்டப்பட்டுள்ளது. வலது காலை முன்னோக்கி மடக்கி, இடது காலை பின்னோக்கி வளைத்து நீட்டியவாறு பறந்த நிலையில் காட்டப்பட்டுள்ள நிலவன் தலைக்கோலமாய் பூரிம முகப்புடன் கூடிய கரண்ட மகுடம் தரித்து, நெற்றிப்பட்டை அணிந்துள்ளார். குழல் கற்றைகள் இரு செவிகளின் பின்புறம் விழுந்துள்ளன. நீள் செவிகளில் அணிந்துள்ள மகர குண்டலங்கள் இரு தோள்களிலும் முன் விழுந்துள்ளன. கழுத்தில் சரப்பளியும், முத்தாரம் ஒன்றும் அணிந்துள்ளார். துணியாலான முப்புரி நூல் இடது முழங்கையில் விழுந்துள்ளது.கைகளில் தோள்வளைகளும், மூன்றடுக்கு முன் வளைகளும் அணி செய்கின்றன. இடையில் கடிபந்தம் முன் வளைந்துள்ளது. அரையாடை அணிந்துள்ளார் போலும். வலது கை போற்றி முத்திரையைக் காட்டுகிறது. இடது கையை தொடையில் ஊரு முத்திரையாக வைத்துள்ளார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
சந்திரன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |