
உறுமி மேளக்காரன்
சிற்பத்தின் பெயர் | உறுமி மேளக்காரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | வாழ்வியல் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
தனிச் சிற்பமாக அமைந்துள்ள இந்த இசைக்கலைஞன் உறுமி மேளக்காரன் ஆவான். வல மார்பின் குறுக்கே செல்லக்கூடிய தோற்பட்டையில் கட்டப்பட்டுள்ள உறுமி மேளத்தை இரு கைகளாலும் இசைக்கிறான். இரு கைகளிலும் உறுமியை வாசிக்கும் இரு குச்சிகளைக் கொண்டுள்ளான். இந்த மேளத்தின் முகத்தை குச்சியால் உரசி உராய்ந்து ஒரு விலங்கு உறுமுவது போல இசையெழுப்புவர். முறுக்கிய மீசையுடன், பீடத்தின் மீது நின்றவாறு மேளம் இசைக்கும் இக்கலைஞன் வீரன் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறான். |
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
உறுமி மேளம் ஒரு தாள தோற் இசைக்கருவியாகும். இது தமிழர் நாட்டுப்புற இசையிலும், தமிழிசையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. மாரியம்மன், அய்யனார், கருப்பசாமி போன்ற நாட்டார் தெய்வங்களை வணங்குவதில் உறுமி மேளம் சிறப்பிடம் பெறுகிறது. உறுமி மேளை இரண்டு முகங்கள் உடைய, இடை சுருங்கிய ஒரு தோற் கருவி ஆகும். இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது. |
|
ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 May 2020 |
பார்வைகள் | 24 |
பிடித்தவை | 0 |