
யானை வீரன்
சிற்பத்தின் பெயர் | யானை வீரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | வாழ்வியல் சிற்பம் |
ஆக்கப்பொருள் | மரம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
யானை மீதேறிப் போர்புரியும் வீரன் ஒருவனின் முகம் சிதைந்துள்ளது. யானை நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. தும்பிக்கையை மேலே தூக்கி பிளிறும் யானையின் முன்னால் நின்று வீரனொருவன் அந்த யானையைத் தாக்குகிறான். களிறு எறிந்து வீழ்ந்து படுதல் போற்றக்கூடிய வீரச்செயலாகும். அதனை பண்டு வீர்ர்கள் விரும்பி ஏற்பர். ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனுக்கு பரணி பாடுதல் தமிழ் மரபாகும். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இது ஒரு போர்க் காட்சியாகும். யானை மேல் அமர்ந்த வீரனுடன் போர்புரியும் மற்றொரு வீரன் தன்னைத் தாக்கும் களிறை தன் கையில் உள்ள வேலால் தாக்குகிறான். இச்சிற்பம் தேர்ச்சிற்பமாகும். தேரில் அதனை பொருத்துவதற்கு ஏற்ப துளைகளுடன் கூடிய மரத்தாங்கியும் இதனுடன் செதுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. |
|
ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 May 2020 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |