Back
சிற்பம்
ஆண் கடவுள் (உடைந்த சிற்பம்)
சிற்பத்தின் பெயர் ஆண் கடவுள் (உடைந்த சிற்பம்)
சிற்பத்தின்அமைவிடம் கரூர் அருங்காட்சியகம்
ஊர் கரூர்
வட்டம் கரூர்
மாவட்டம் கரூர்
அமைவிடத்தின் பெயர் கரூர் அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி. 10-11 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்

           முற்றிலும் கழுத்துவரை தலைப்பகுதி சிதைந்த நிலையில் அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இச்சிற்பத்தின் உருவமைதியை நோக்குகையில் நான்கு கைகளுடன் கூடிய ஆண் தெய்வமாக இருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இச்சிற்பத்தின் கால்பகுதிகளும் உடைந்துள்ளன. மார்பின் குறுக்கே சன்னவீரம் அல்லது வீரச்சங்கிலி அணிந்தும், முன்னிரு கைகளை இடையில் வைத்தவாறும் நிற்கும் தோரணையை நோக்குகையில் வீரக்கடவுளான முருகனாய் இருக்கலாம்.

ஒளிப்படம்எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

          காலவோட்டத்தில் இயற்கை சூழலில் பொலிவிழந்த சிற்பங்கள் அல்லது உடைக்கப்பட்டு சிதிலமடைந்த சிற்பங்கள் அவற்றின் கலைப்பாணி மற்றும் காலத் தொன்மைக் கருதி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்நிலையில் தலையற்ற நிலையில் உள்ள இச்சிற்பம் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் காணப்படுகின்றது.

ஆவண இருப்பிடம் கரூர் அருங்காட்சியகம்
ஆண் கடவுள் (உடைந்த சிற்பம்)
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 20 May 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்