பைரவி
| சிற்பத்தின் பெயர் | பைரவி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
| ஊர் | கரூர் |
| வட்டம் | கரூர் |
| மாவட்டம் | கரூர் |
| அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
| சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
| ஆக்கப்பொருள் | கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி. 10-11 - ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
நின்ற கோலத்தில் பைரவி காட்டப்பட்டுள்ளாள். தீச்சுடர் போன்ற ஜடாபாரம் தலையை அலங்கரிக்கிறது. காதுகளில் மகரகுண்டலமும், பத்ர குண்டலமும் விளங்குகின்றன. மார்பின் குறுக்கே புரிநூலாக சங்கிலி செல்கிறது. கணுக்காலில் வீரக்கழல்கள் துலங்கிட, கைகளில் வளைகள் விளங்கிட, வலதுகாலை ஊன்றி, இடது காலை சற்று வளைத்து முன் வைத்து, இடது கையில் கபாலப் பாத்திரத்தை ஏந்தியபடி உள்ளாள். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
64 யோகினிகளில் ஒன்றான பைரவி திருக்கோலம் தமிழகத்தில் மிகவும் அரிதானது. நின்ற நிலையில் உள்ள இச்சிற்பம் சென்னை அருங்காட்சியகத்திலிருந்து கரூர் அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. |
|
| ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 May 2020 |
| பார்வைகள் | 71 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |