சிற்பம்

பாவை விளக்கு

பாவை விளக்கு
சிற்பத்தின் பெயர் பாவை விளக்கு
சிற்பத்தின்அமைவிடம் கரூர் அருங்காட்சியகம்
ஊர் கரூர்
வட்டம் கரூர்
மாவட்டம் கரூர்
அமைவிடத்தின் பெயர் கரூர் அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்

         கோயில்களில் இறைவனின் திருமுன்னில் வைக்கப்பட்டுள்ள பாவை விளக்குகள் பெரும்பாலும் உலோகத்தால் ஆனவை. செப்புத் திருமேனிகளாக இவை வடிக்கப்படுதலே மரபு. அவ்வகையில் கரூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த பாவை விளக்கு அழகான பாவை ஒருத்தி பீடத்தில் நின்றபடி தன் கைகளில் விளக்கினை ஏந்தியபடி இறைவனின் திருமுன்னே நிற்கிறாள். நன்கு வடிவமைக்கப்பட்ட ஆடையணிகளைப் புனைந்துள்ளாள். பொதுவாக பாவை விளக்கு என்பது திருத்தலப் பணிகளுள் ஒன்றான கரச்சேவையாக கருதப்படுகிறது.

ஒளிப்படம்எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

         பாவை விளக்கு என்பது ஒரு பெண் தன் இரு கைகளில் விளக்கினை ஏந்தியபடி இறைவனின் திருத்தலத்தில் நின்று கொண்டிருக்கும் உருவ அமைப்பாகும். அரிதாக சில இடங்களில் ஆண் பாவை விளக்குகளும் உள்ளன. மையிலாப்பூர் கபாலிசுவரர் கோவிலின் மூலவர் சந்நிதியில் ஆண் பாவை விளக்கும், அம்மன் சந்நிதியில் பெண் பாவை விளக்கும் உள்ளன. முல்லைப் பாட்டில் பாவை விளக்கு எரிதல் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. பாவை விளக்குகள் பொதுவாக உலோகங்களால் செப்புத் திருமேனிகளாக வடிக்கப்படுதல் மரபு.

ஆவண இருப்பிடம் கரூர் அருங்காட்சியகம்
பாவை விளக்கு
சிற்பம்

பாவை விளக்கு

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 20 May 2020
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்