
நாகக் கல்
சிற்பத்தின் பெயர் | நாகக் கல் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
கரூர் அருங்காட்சியகத்தில் உள்ள இந்த நாக உருவம் ஐந்து தலை கொண்டதாக வடிக்கப்பட்டுள்ளது. வாலைச் சுருட்டிய நிலையில் தலையைத் தூக்கியவாறு, பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளது. நாகத்தின் வாயைப் பிளந்தவாறு வீரன் ஒருவன் வெளிவருகிறான். இச்சிற்பம் பாகவத புராணத்தை மையப்படுத்தி வடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தமிழகத் திருக்கோயில்களில் தலமரத்தின் கீழ் கல்லால் ஆன நாகங்கள் செய்யப்பட்டு வழிபடப்படுவது மரபு. நாகவழிபாடு தொல் பழங்காலத்தில் இருந்து உலகெங்கிலும் பின்பற்றப்படுவதாகும். நாகங்களை தம் முன்னோர்கள் என்று கருதுவர். மேலும் நாகங்கள் மகப்பேற்றினை அருளும் என்பதாக தொல்நம்பிக்கையால் வளம் வேண்டி நாக உருவங்கள் வடிக்கப்பட்டு திருத்தலங்களில் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றன. |
|
ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 May 2020 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |