
கருப்பண்ணசாமி
சிற்பத்தின் பெயர் | கருப்பண்ணசாமி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | நாட்டுப்புறத் தெய்வம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
கரூர் அருங்காட்சியகத்தில் உள்ள கருப்பண்ணசாமி பாதங்களில் செருப்பு அணிந்தபடி நின்ற நிலையில் உள்ளார். வலது கையில் குறுவாளைப் பிடித்துள்ளார். இடது கையை இடையில் கடி முத்திரையாக வைத்து, வீரருக்குரிய அரையாடை அணிந்து, கால்களில் தண்டைகளுடன் காட்சியளிக்கிறார். தலையில் பக்கவாட்டு கொண்டை அலங்கரிக்கிறது. நீண்ட முறுக்கிய மீசையுடன் அரசருக்குரிய தோரணையுடன் காணப்படுகிறார். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நாட்டுப்புறத் தெய்வங்களுள் ஒன்றாக விளங்குகின்ற கருப்பசாமி வழிபாடு தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் தொன்மையானது. நாட்டார் வழக்காற்றியலில் பல கருப்பசாமிகள் வழிபடப்படுகின்றனர். இவர்கள் அவ்வூரின் எல்லைகளில் காவல் தெய்வங்களாக அமர்ந்து வழிபாட்டில் உள்ளனர். |
|
ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 May 2020 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |