
அரசன்
சிற்பத்தின் பெயர் | அரசன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | வாழ்வியல் சிற்பம் |
ஆக்கப்பொருள் | மரம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
கிரீட மகுடத்துடன் முகத்தில் நீண்ட முறுக்கிய மீசையுடன் காணப்படும் வீரமிக்க அரசன் ஒருவன் தன் கைகளில் நீண்ட உடைவாளைப் பிடித்துள்ளான். செவிகளில் பத்ரகுண்டலங்களும், கழுத்தில் பெரிய பதக்கத்துடன் கூடிய முத்துமாலையும், பிறவணிகளும், முழங்கால் வரையிலான போர் உடையும், பாதச்சதங்கையும், தண்டைச் சிலம்பும் அரசனின் உருவமைதியை காட்டுவனவாக அமைக்கப்பட்டுள்ளன. நெரித்த புருவங்கள் அரசன் போருக்கு ஆயத்தமாகும் அவனது வீரத்தைக் காட்டுவதாக வடிக்கப்பட்டுள்ளமை சிறப்பு. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இது ஒரு போர்க் காட்சியாகும். போருக்குச் செல்லும் அரசனின் உருவமைதி இங்கு மரத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டு தேரில் பொருத்தப்பட்டுள்ளது. |
|
ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 May 2020 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |