
எலி வாகனம் (மூஞ்சுறு)
சிற்பத்தின் பெயர் | எலி வாகனம் (மூஞ்சுறு) |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
கரூரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் வழிபாடற்ற விநாயகர் கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட எலி வடிவ மூஞ்சுறு சிற்பங்கள் நான்கு இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கணபதியின் வாகனமாக கருதப்படும் இந்த எலி வடிவங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவமைப்பினைப் கொண்டவை. தொல்குடி மக்கள் தங்களின் குலச்சின்னங்களை வழிபடுதல் கடவுள் வழிபாட்டின் தொடக்க நிலையாகும். தொல்குடி மக்கள் பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்த நிலையில் தங்கள் தங்களுக்கென ஒரு குலச்சின்னத்தைக் கொண்டிருந்தனர். அக்குலச்சின்னமானது விலங்கு, தாவரம், இயற்கை ஆகியனவாக விளங்கியது. இந்த இனக்குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் போது அவரவர் குலம் வெற்றி பெற்றதை தோற்ற குடியின் குலச்சின்னத்தை வாகனமாக அல்லது காலடியில் இருத்தி சிற்பங்களை அமைத்தல் ஆகம மரபு. அவ்வாறாக எலி குலத்தவரை அடக்கிய யானைக் குலத்தவரின் வெற்றிக் குறியீடாக இந்த மூஞ்சுறு உருவங்களைக் கருதலாம். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பொதுவாக திருக்கோயில்களில் நவக்கிரகங்களை சிற்பங்களாக வைத்து வழிபடுதல் ஆகம மரபு. ஒன்பது கோள்களையும் தெய்வங்களாகக் கருதி அவர்களின் உருவமைதியினை ஆகம முறைப்படி அமைத்து கிரகங்களில் அவரவர்க்குரிய நாளில் வழிபட்டால் நன்மை கிட்டும் என்பது நம்பிக்கையாக பின்பற்றப்பட்டு வருகிறது. |
|
ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 May 2020 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |