விஷ்ணு துர்க்கை
| சிற்பத்தின் பெயர் | விஷ்ணு துர்க்கை |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
| ஊர் | கரூர் |
| வட்டம் | கரூர் |
| மாவட்டம் | கரூர் |
| அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
| சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
| ஆக்கப்பொருள் | கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி. 12-13 - ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
விஷ்ணு துர்க்கை சமபாதத்தில் நின்றுள்ளாள். நான்கு திருக்கரங்களில் பின்னிரு கைகளில் சங்கு, எறிநிலை சக்கரம் ஏந்தியுள்ளாள். முன் வலது கை அபய முத்திரையும், முன் இடது கை ஊரு முத்திரையும் காட்டுகின்றன. மார்பில் குஜபந்தமும், இடையில் அரையாடையும் அணிந்துள்ளாள். தலையின் மகுடமும் முகமும் சற்று சிதைந்துள்ளன. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கும் துர்க்கை விஷ்ணு துர்க்கை என அழைக்கப்படுவாள். விஷ்ணு துர்க்கை பெரும்பாலும் நான்கு அல்லு எட்டு கைகளுடன் அமைக்கப்படுதல் மரபு. சோழர்களின் கற்றளிகளில் இச்சிற்பங்கள் வடபுற அர்த்தமண்டப கோட்டத்தில் இடம் பெற்றுள்ளன. |
|
| ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 May 2020 |
| பார்வைகள் | 109 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |