
மகிஷாசுரமர்த்தினி
சிற்பத்தின் பெயர் | மகிஷாசுரமர்த்தினி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி. 12-13 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
பீடத்தின் மீது அமைந்துள்ள எருமைத்தலையின் மேல் நின்ற நிலையில் மகிடமர்த்தினி விளங்குகிறாள். முன்வலது கையும், பின் இடது கையும், தலையலங்காரமும் உடைந்த நிலையில் காணப்படும் இச்சிற்பத்தில் தேவி வலது பின் கையில் சக்கரம் ஏந்தியுள்ளாள். இடது முன் கை தொடையின் மீது ஊரு முத்திரையில் வைக்கப்பட்டுள்ளது. கணுக்கால் வரையிலான மடிப்புகளுடன் கூடிய ஆடையும் மார்பில் குஜபந்தமும் காட்டப்பட்டுள்ளன. நெற்றியில் தொங்கல்களுடன் கூடிய நெற்றிப்பட்டை துலங்குகிறது. செவிகளில் பத்ரகுண்டலம் அணி செய்ய, கடக வளை, கேயூரம், தோள்வளை ஆகியன கையணிகளாக விளங்கிட கால்களில் வீரக்கழல்கள், பாதச்சதங்கை விளங்கிட, இடையில் கட்டிய ஆடை முடிச்சுகள் பின்புறம் நீண்டு தொங்கிய நிலையில் விசயநகரக் கலைப்பாணியாக இச்சிற்பம் விளங்குகிறது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மகிஷாசுரமர்த்தினி அல்லது துர்க்கை (சக்தி) சிங்க வாகனத்தில் ஏறி, மகிஷன் என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்த அன்னையாவாள். பல்லவர் காலத்திய மகிஷமர்த்தினி உருவங்கள் தொண்டை மண்டலமெங்கும், சோழர் காலத்திய கற்றளிகளில் சோழர் கலைப்பாணியிலும் காணக்கிடக்கின்றன. |
|
ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 May 2020 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |